வெற்றியுள்ள சபையின் 5 மதிப்புகள்
'சபை'
என்பது தேவனுடைய திட்டமாக, இயேசுவின் மணவாட்டியாக, சமுதாயத்தின் தீபமாக, சாத்தானுடைய எதிரியாக, மக்களுடைய வழிகாட்டியாக இருக்கிறது. சபை எப்படி செயல்படவேண்டும்,
என்ன செய்யவேண்டும் என்பதை அப்போஸ்தல நடபடிகளில் ஆதிசபையைக் கொண்டு நமக்கு முன்மாதிரி காட்டியுள்ளார். ஆதிசபையார் என்ன செய்தார்கள்? அப்-2:
42 அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். அப்-8: 4 சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள்.
சபை
யார்? சபையார்தான் சபை. சபை யாருடயது?
தேவனுடையது. சபை
யாருக்குரியது? மணவாளனாம் இயேசுவுக்குரியது.
சபையில்
காணப்பட வேண்டியவைள்:
1. தேவனோடு
நெருக்கமான உறவு:
தேவனோடு
நம்முடைய உறவை பெலப்படுத்துவதற்காக ஜெபம் என்ற
முறையையும், வேதவாசிப்பையும் தேவன் ஏற்படுத்தியுள்ளார். ஜெபம் என்பது நம்முடைய தேவைகளை தேவனிடம் கேட்பதற்காக மாத்திரமல்ல, அவரோடு உறவாடுவதற்காகவும், அவரோடு உறவில் வளருவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடமைக்காகவோ, கட்டாயத்திற்காகவோ, மற்றவர்களைப் பிரியப்படுத்துவதற்காகவோ, மற்றவர்களுக்குப் பயந்தோ, மனப்பாட
முறையிலோ ஜெபிக்கிற வாழ்க்கை சரியான ஜெபவாழ்க்கை அல்ல. ஜெபம் நாம் தேவனோடு பேசுவதற்கும்,
வேதவாசிப்பு தேவன் நம்மோடு பேசுவதற்கும் உதவிசெய்கிறது. தேவனோடு நம்முடைய தளனிப்பட்ட உறவு எப்படிப்பட்டதாக இருக்கிறது?
(மத-22: 37-40)
2. ஆவியின்
கனி நிறைந்த வாழ்வு:
சபையில்
கூடிவந்து, சபை மக்களுடன் நாம்
செலவழிக்கும் நேரம் 1மூ ஆனால் சமுதாயத்தில்
மற்ற மக்களோடு நாம் செலவழிக்கிற நேரம்
99மூ மற்ற மக்கள் மத்தியில்
நம்முடைய வாழ்க்கை எப்படி இரு;கிறது என்பதை
வைத்துத்தான் நாம் அவர்களுக்கு வழிகாட்டியாக,
தீபமாகப் பயன்படுகிற செயல் அமைந்திருக்கும். ஆவியின் கனி என்பது தெய்வீக
சுபாவத்தைக் குறிக்கிறது, தேவனைப் பிரதபலிக்கிற வாழ்க்கையைக் காட்டுகிறது. (கலா-5: 22-23). நம்மிடம் தெய்வீக சுபாவங்கள் காணப்பட்டால் தேவன் மகிமைப்படுவார். நம்மிடத்தில் மாம்ச சுபாவம் காணப்பட்டால் சாத்தான் மகிமைப்படுவான்.
3. கிருபையின்
கதையைச் சொல்லுதல்:
நாம்
எப்படி இரட்சிக்கப்பட்டோம் என்ற சம்பவத்தை பிறருக்குச்
சொல்லுதல், நம்முடைய முக்கியமான வேலையாகவும், நாம் கட்டாயம் செய்யவேண்டிய
வேலையாகவும், நாம் ஒவ்வொருவருமே செய்யவேண்டிய
வேலையாகவும் இருக்கிறது. கிருபையால் தேவன் நம்மை எப்படி இரட்சித்தார் என்பதை நாம் பிறருக்குச் சொல்லிட
வேண்டும். மாற்கு-5: 18-20 அப்படியே அவர் படவில் ஏறுகிறபொழுது,
பிசாசு பிடித்திருந்தவன், அவரோடேகூட இருக்கும்படி தனக்கு உத்தரவுகொடுக்க அவரை வேண்டிக்கொண்டான். இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார். அந்தப்படி அவன் போய், இயேசு
தனக்குச் செய்தவைகளையெல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான், எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
சுவிசேஷத்தை
3 நிமிடத்தில் சொல்லவேண்டிய பயிற்சியை மேற்கொள்ளவிருக்கிறோம். 1 நிமிடம் இரட்சிக்கப்படுவதற்குமுன் உங்கள் வாழ்க்கையைக் குறித்து சொல்லுதல். 1 நிமிடம் நீங்கள் எப்படி இரட்சிக்கப்பட்டீர்கள் என்பதைக் குறித்துச் சொல்லுதல். 1 நிமிடம் இரட்சிக்கப்பட்ட பிறகு உங்கள் வாழ்வு எப்படி மாறியிருக்கிறது என்பதைக் குறித்து சொல்லுதல்.
4. ஆவியின்
வரங்கள்:
வேதாகமத்தில்
28ற்கும் மேற்பட்ட வரங்கள் அல்லது கொடைகளைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. ஆவியின் வரங்கள் 9ஐக் குறித்துத்தான் ஓரளவிற்கு
நாம் அறிந்திருக்கிறோம். தேவன் என்னவிதமான கொடைகளை அல்லது வரங்களை நமக்குக் கொடுத்திருக்கிறார்
என்பதை நாம் அறிந்து அவைகளிலே
வளர்ந்திடவேண்டும், அவைகளைப் பயன்படுத்தி வாழ்ந்திட
வேண்டும். பூமியிலே தேவனுடைய வல்லமை வெளிப்படுத்தப்படுவதற்கு ஆவியின் வரங்கள் கருவியாக இருக்கின்றது.
5. உக்கிராணத்துவம்:
(தேவையிலிருப்போருக்குக்
கொடுத்தல்)
தேவன்
பல நன்மைகளை நமக்குக் கொடுத்திருக்கிறார், கொடுத்துக் கொண்டிருக்கிறார். (வருமானங்கள், தாலந்துகள், திறமைகள்...) எதற்காக?
நாம்
அனுபவிப்பதற்கு பிறரிடம்
பகரிந்துகொள்வதற்கு இல்லாதவர்களுக்கு
முழுமையாகக் கொடுப்பதற்கு.
Comments
Post a Comment