விடுதலையின் சத்தியங்கள்




விடுதலை என்றால்?
  • கட்டப்பட்டிருப்பவர்கள் கட்டவிழ்க்கப்படும் செயல் (லூக்-13: 16)
  • சிறையிலிருப்பவர்கள் சிறையைவிட்டு வெளியே வரும் செயல்
  • அடிமையாக இருப்பவர்கள் சுதந்திரமாக வாழ்ந்திட உரிமை பெரும்செயல்
  •  சாத்தானும், அசுத்த ஆவிளும்;, மாந்த்ரீகங்களும் கட்டுகின்றன (லுக்கா-13: 16, 11-12)
  •  பாவங்கள், சபாங்கள் சிறைப்படுத்துகின்றன (சிம்ஸோனின் வாழ்வு சிறையாக்கப்பட்டது)
  •  பயங்கள், கவலைகள், தீயபழக்கங்கள் அடிமைப்படுத்துகின்றன (எபி-2: 15)

விடுதலையைக் குறித்த கேள்விகள்:
  1. யாரிடமிருந்து விடுதலை?
  2. யாரால் விடுதலை?
  3. யாருக்கு விடுதலை?
  4. யாருடைய நாமத்தில் விடுதலை?
  5. எப்பொழுது விடுதலை?
  6. எவைகளிலிருந்து விடுதலை?
  7. எப்படிப்பட்ட விடுதலை?
  8. எதற்கு விடுதலை?
விடுதலையின் விளைவுகள்:

1. சரீரத்தில் விடுதலையின் விளைவு:
     சுகம், பெலன், ஆரோக்கியம். சரீரத்தின் சகல உறுப்புகளும் சரியாக இயங்குதல்
2. சுபாவத்தில் விடுதலையின் விளைவு:
     தாழ்மை, நற்குணம், நன்னடத்தை, கீழ்படிதல், மன்னித்தல்,                     விட்டுக்கொடுத்தல், புரிந்துகொள்ளுதல், உதவிசெய்தல்
3. உணர்ச்சியில் விடுதலையின் விளைவு:
     சாந்தம், சந்தோஷம், இரக்கம், மனதுருக்கம், கரிசனை, பொறுமை, நிதானம்
4. சிந்தையில் விடுதலையின் விளைவு:
     தேவையற்ற, வீணான, தவறான, அசிங்கமான, அழிவுக்கேதுவான எண்ணங்களுக்கு உள்ளாகாமலிருத்தல்.
நலமானவைகள், நன்மையானவைகள், பக்திவிருத்திக்கு ஏதுவானவைகள், பரிசுத்தமானவைகள், அன்பானவைகள், தேவனுடைய வசனத்தில் உள்ளவைகள் போன்றவற்றை அதிகமாக சிந்தித்தல்
5. நினைவு மண்டலத்தில் விடுதலையின் விளைவு:
     மறக்க முடியாத தீமைகள், துக்கங்கள், அதிர்ச்சி மற்றும் திகிலுக்குரிய சம்பவங்கள், குற்றஉணர்வுகள் நம்மைவிட்டு விலகும்.
நினைவில் இருக்க வேண்டிய நற்காரிங்கள் நமக்குள் பெருகும்.

Comments