தேவன் யார்
தேவன், தெய்வம், கடவுள், இறைவன், ஆண்டவன், சாமி, என்று பல்வேறுபட்ட பதங்களில் பல மக்களால் அழைக்கப்பட்டு நம்பப்படுகிற, ஆராதிக்கப்படுகிற, அதற்காக தங்களிடம் உள்ளதைக் கொடுப்பவர்கள், தங்களையே கொடுப்பவர்கள், பிறரை அவமதிப்பவர்கள், அழிப்பவர்கள் என்று எத்தனையோ சொல்லலாம். தெய்வத்தைத் தேடி எங்கெங்கோ செல்பவர்கள், தெய்வத்தின் பெயரில் எதைஎதையோ செய்பவர்கள் எங்கும் இருப்பதை நாம் பார்க்கிறோம். பல மதங்களில் மக்கள் எல்லோருமே தாங்கள் நம்புபவைகளை 'தெய்வம் அல்லது கடவுள் அல்லது இறைவன்' என்று என்றுதான் சொல்கிறார்கள். எது அல்லது யார் உண்மையான தெய்வம் என்பதை நாம் அறிந்து, பிறருக்கும் அறிவிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
2சாமு-7: 28 இப்போதும் கர்த்தராகிய ஆண்டவரே, நீரே தேவன், உம்முடைய வார்த்தைகள் சத்தியம், தேவரீர் உமது அடியானுக்கு இந்த நல்விசேஷங்களை வாக்குத்தத்தம்பண்ணினீர்.
- மனிதனால் உண்டாக்கப்பட்டவரல்ல, மனிதனை உண்டாக்கினவர் தேவன்.
- மனிதருக்குப் பிறந்து, வாழ்ந்து மரித்தவர்கள் அல்ல, மனிதனாக வந்து, மனுக்குலத்தை மீட்பதற்காக தன்னையே மரணத்தில் கொடுத்;து, உயிர்த்தெழுந்து, எப்போதும் உயிரோடு இருப்பவர் தேவன்.
- எல்லாம் அழிந்தாலும் ஒருபோதும் அழியாதவர், என்றென்றைக்கும் நிலைத்திருப்பவர் தேவன் (சங்-102: 26)
- எல்லாவற்றையும் படைத்து பராமரித்துக் கொண்டிருப்பவர் தேவன்
- உருவத்தாலோ ஓவியத்தாலோ விவரிக்கப்படவோ, வரையப்படவோ முடியாதவர் தேவன். (தெய்வங்கள் என்று சொல்லப்படுகிற விக்கிரங்களும் படங்களும் தேவனை அல்ல. மனிதனுடைய கற்பனையையே தெய்வம் என்று காண்பிக்கின்றன. அது வீணானது, மாயையானது) அவருக்கு துவக்கமும் இல்லை முடியுவும் இல்லை. ஆதியும் அந்தமும் அவரே!
- தெய்வபக்தி அல்லது மதக்கொள்கை என்ற பெயரில் மனிதனை மனிதன் விரோதிக்கச் செய்வது, அழிக்கச் செய்வது, வெறுப்பு, பகைமை, கொலைவெறி, மதவெறி, இனவெறி, மொழிவெறி, இரத்தவெறி என்று தீமைக்குத் துணைபோவது தேவனாக இருக்குமடியாது. சாத்தானுடைய பெயர் என்னவென்றால் அவன் பொய்யன், மனுஷகொலைபாதகன், திருடன், அழிப்பவன். அமைதி, ஆறுதல், இரக்கம், ஈவு, உண்மை, ஊக்கம் (உற்சாகம்) போன்றவற்றை எல்லோருக்கும் எப்போதும் கொடுப்பவர் தேவன்.
- தீயசக்திகளாகிய பொல்லாத ஆவிகளை முறியடிக்கும் வல்லமையுடைவராக, அவரை நம்புபவர்கள் அவைகளைத் துரத்துவதற்கு தனது நாமத்தைப் பயன்படுத்தும் உரிமையையும் கொடுப்பவர் தேவன்.
சங்-82: 8 தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும், நீரே சகல ஜாதிகளையும் (தேசங்களையும்) சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.
சங்-89: 11 வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர். (மனிதன் வீட்டுக்கும், கட்;டிடத்திற்கும், கோவிலுக்கும் தான் அஸ்திபாரம் போட்டான். போட்டுக்கொண்டிருக்கிறான். தேவனே பூமிக்கே அஸ்திபாரம் போட்டவராவார்).
சங்-90: 2 பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர். (தெய்வங்கள் என்று சொல்லப்படுபவைகள் இடையில் தோன்றியவைகள்தான். தேவனோ என்றென்றைக்கும் இருக்கிறார்).
வெளி-4: 11 கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர் நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளு மாயிருக்கிறது என்றார்கள்.
நாம் ஏன் இதைக் கற்றுக்கொள்கிறோம்?
மக்கள் தாங்களாக யோசித்து செயல்படுதல் என்பது, குறிப்பாக தெய்வம் சம்பத்தப்பட் காரியத்தில் மிகவும் குறைவுபட்டு இருப்பதை நாம் எங்கும் பார்க்கிறோம். உண்மையைச் சொல்வது உண்மையை அறிந்தவர்கள்மீது விழுந்த கடமையாக இருக்கிறது. நன்மையை அறிந்தவர்கள் தீமைக்கு மக்களை விலக்கி விடுவித்தல் தேவையானதாக இருக்கிறது. பாதையை அறிந்தவர்கள் பாதையைக் காட்டுதல் அவசியமானதாக இருக்கிறது.
Comments
Post a Comment