ஆவிக்குரிய போராயுதங்கள்
2கொரி-10: 4
- ஆவிக்குரியவர்கள் என்று நாம் அழைக்கப்படுகிறோம் (கலா-6: 1)
- ஆவிக்கேற்றபடி நடந்திட நாம் அழைக்கப்பட்டுள்ளோம் (கலா-5: 16, ரோம-8: 1)
- ஆவிக்குரியவைகளை சிந்தித்திட நாம் அழைக்கப்பட்டுள்ளோம் (ரோம-8: 5)
- ஆவியின் கனி கொடுத்திட நாம் அழைக்கப்பட்டுள்ளோம் (கலா-5: 22)
- ஆவிக்குரிய யுத்தம்செய்திட நாம் அழைக்கப்பட்டுள்ளோம் (எபே-6: 11-12)
இந்த ஆயுதங்கள்:
1. நமக்கு அவசியமானவைகள் (யுத்தம் செய்வதற்கு)2. நம்மை ஆயத்தமாக்குபவைகள் (கர்த்தரின் வருகைக்கு)
3. நம்மோடு இருக்க வேண்டிவைகள் (ஜெயமெடுப்பதற்கு)
4. நாம் பழக்கப்பட வேண்டியவைகள் (பயன்படுத்திட)
நம்முடைய யுத்தம் மாம்சத்திற்குரியது அல்ல, மாம்சத்தோடும் அல்ல. மாறாக சாத்தானுடைய ஆவிகளோடு ஆவிக்குரிய மண்ணடலத்திற்குரியதாக இருக்கிறது. எனவே பழக்கமில்லாமல் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்திட முடியாது, ஆயுதங்களில்லாமல் ஆவிக்குரிய யுத்தத்தில் ஜெயமெடுக்கவும் முடியாது.
முதலாவது ஆயுதம்:
1தெச-5: 8 பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக் கொண்டிருக்கக்கடவோம்.1. மார்க்கவசம்: விசுவாசம், அன்பு
இது நம்முடைய இருதயத்தைப் பாதுகாப்பதற்குப் பயன்படும் ஆயுத-மாகும். உள்ளான மனிதன், உண்மையான நான், உள்ளம், மனிதனுடைய ஆவி என்று அழைக்கப்படுகிற பகுதிதான் இருதயம் ஆகும். நம்ஐடய முக்கிய பகுதியாக இது இருக்கிறது. சரீரப்பிரகாரமாகப் பார்த்தாலும் இரத்த ஓட்டத்தை இயக்குகிற பகுதியாக, சுவாசத்தை இயக்குகிற நுறையீரல் இருக்கும் பகுதியாக, நம்முடைய சரீரத்தின் மையப் பகுதியாக இருதயம் இருக்கிறது.நம்முடைய இருதயத்தை சாத்தான் எவ்வாறு தாக்குகிறான்?
- பாவமன்னிப்பைப் பெற்றவர்களை குற்ற உணர்வைக் கொடுத்து, தாழ்வு மனப்பாண்மையைக் கொடுத்து, பின்மாற்றத்திற்குள்ளும் அவநம்பிக்கைக்குள்ளும் கொண்டுசெல்ல எத்தனிக்கிறான்.
- பாவமன்னிப்பைப் பெறாதவர்களை மனந்திரும்புதலுக்குள் வராதபடி இருதயக் கடினத்திற்குள்ளும், மனக்குருட்டாட்டத்திற் குள்ளும் நிலைத்திருக்கச் செய்கிறான்.
- யுத்தம் செய்திட ஆயுதங்கள் வேண்டும்
- ஜெயமெடுக்க யுத்தம் செய்யவேண்டும்
- ஜெயம்கொள்பவர்கள் பலன் பெறுவார்கள்
Comments
Post a Comment