1ஆம் ராஜாக்கள் - 2ஆம் ராஜாக்கள்
முகவுரை:
சாமுவேலின் புத்தகத்தைப்போலவே ராஜாக்களின் புத்தகமும் ஆரம்பத்தில் ஒரே புத்தகமாகத்தான் இருந்தது. இந்தப் புத்தகங்களில் சாலோமோன் முதல் யூதாவின் அழிவு வரை இஸ்ரவேலின் சரித்திரம் எழுதப்பட்டிருக்கிறது.
சரித்திரம் திறக்கப்படுதல்:
1. முற்பிதாக்களின் காலம்: (சுமார் கி.மு. 2000)
(ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு)
2. யாத்திரையின் காலம்: (சுமார் கி.மு. 1500)
(மோசே, யோசுவா, நியாயாதிபதிகள்)
3. ராஜாக்களின் காலம்: (கிமு. 1000)
ஏலி, சாமுவேல், சவுல், தாவீது, சாலோமோன், பிரிக்கப்பட்ட ராஜ்யங்கள்
4. எருசலேமின் வீழ்ச்சியின் காலம்: (கி.மு. 500)
சிறைபிடிப்பு, மல்கியா கி.மு. 400, அமைதியின் ஆண்டுகள்
(பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் இடைப்பட்ட காலம்)
5. மேசியாவின் காலம்: (கி.பி. 1)
சாலொமோன் கி.மு. 971
எருசலேமின் வீழ்ச்சி கி.மு.722
சிறைபிடிப்பு கி.மு.586
சாலொமோனுக்குப் பிறகு இஸ்ரவேல் தேசம் இரண்டு ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒன்பதரைக் கோத்திரங்களைக் கொண்ட இஸ்ரவேல் தேசம், இதற்கு சமாரியா தலைநகரமாக இருந்தது. இஸ்ரவேல் வடதேசம் என்று அழைக்கப்படுகிறது. இவர்களுடைய முதல் ராஜா யெரோபெயாம். இரண்டரைக் கோத்திரங்களைக் கொண்ட யூதாதேசம், இதற்கு எருசலேம் தலைநகராக இருந்தது. யூதா தென்தேசம் என்றும் அழைக்கப்படுகிறது. இவர்களுடைய முதல் ராஜா ரெகோபெயாம்.
சாலொமோனின் தவறுகள் ராஜ்யம் இரண்டாகப் பிரிக்கப்படுவதற்குக் காரணமாயிற்று. ராஜாக்களின் புத்தகத்தின் தலைப்பு கீழ்படிதலாகும். சாலொமோனுக்குப் பிறகு இஸ்ரவேலில் 19 ராஜாக்களும், யூதா வில் 20 ராஜாக்களும் காணப்படுகிறார்கள். இந்த ராஜாக்களில் இரண்டு வகைப்பட்ட குழுக்களை நாம் பார்க்கமுடியும். ஒரு குழு தேவனுக்குக் கீழ்படிந்து ஆசீர்வதிக்கப்பட்ட ராஜாக்கள், மற்றொன்று தேவனுக்குக் கீழ்படியாமல் சாபத்தை அனுபவித்த ராஜாக்களாவார்கள்.
சாலொமோனின் சிறப்பு: 1ராஜா-3: 4-13
அப்படியே ராஜா பலியிட கிபியோனுக்குப் போனான், அது பெரிய மேடையாயிருந்தது, அந்தப் பலிபீடத்தின்மேல் சாலொமோன் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான். 5. கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி, நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார். 6. அதற்குச் சாலொமோன்: என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் மன நேர்மையுமாய் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவர் அவருக்குப் பெரிய கிருபைசெய்து, அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து, இந்நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிற ஒரு குமாரனை அவருக்குத் தந்தீர். 7. இப்போதும் என் தேவனாகிய கர்த்தாவே, தேவர் உமது அடியேனை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்குவரவு அறியாத சிறு பிள்ளையாய் இருக்கிறேன். 8. நீர் தெரிந்துகொண்டதும் ஏராளத்தினால் எண்ணிக்கைக்கு அடங்காததும் இலக்கத்திற்கு உட்படாததுமான திராளான ஜனங்களாகிய உமது ஜனத்தின் நடுவில் அடியேன் இருக்கிறேன். 9. ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும், ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான். 10. சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாய் இருந்தது. 11. ஆகையினால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக் கொண்டபடியினால், 12. உன் வார்த்தைகளின்படி செய்தேன், ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன், இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை. 13. இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவாpயத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன், உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை.
1 ராஜாக்களின் தொகுப்பு:
(மொத்தம் 22 அதிகாரங்கள், 3 பகுதிகளாகப் பிரிக்கலாம்)
I. அதிகாரங்கள் 1 முதல் 11
1. சாலொமோன் ராஜாவாக நிலைப் படுத்தப்படுதல் (1-3)
2. சாலொமோனின் நிர்வாகம் (4)
3. தேவாலயம் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படுதல் (5-9)
4. சேபா தேசத்து ராஜஸ்திரீ (10)
5. சோகமான முடிவு (11)
சாலொமோனின் சோகமான முடிவிற்குக் காரணிகள்:
1. பொன்கள்
1 ராஜா-10: 15 ஒவ்வொரு வருஷத்தில் அவனுக்கு வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது. 666? அந்திக் கிறிஸ்துவின் இலக்கம் என்று வெளி-13: 18 சொல்கிறது.
2. பெண்கள்
1ராஜா-11: 1-3 ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததும் அல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரிகள்மேலும் ஆசைவைத்தான். 2. கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் அவர்-களண்டைக்கும் அவர்கள் உங்கள் அண்டைக்கும் பிரவேசிக்கலாகாது, அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப் பண்ணுவார்கள் என்று சொல்லி இருந்தார், சாலொமோன் அவர்கள்மேல் ஆசைவைத்து, அவர்களோடு ஐக்கிய மாயிருந்தான். 3. அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறு மனையாட்டிகளும் இருந்தார்கள், அவனுடைய ஸ்திரிகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப் பண்ணினார்கள்.
உபா-17: 17 அவன் (ராஜாவின்) இருதயம் பின்வாங்கிப் போகாதபடி அவன் அநேகம் ஸ்திரிகளைப் படைக்க வேண்டாம், வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாய்ப் பெருகப் பண்ணவும் வேண்டாம்.
3. ஐசுவரியம்:
1ராஜா-10: 18 ராஜா தந்தத்தினால் பெரிய ஒரு சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப் பொன் தகட்டால் மூடினான். 10: 23 பூமியின் சகல ராஜாக்களைப் பார்க்கிலும், ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாய் இருந்தான்.
4. படைபலம்:
1ராஜா-10: 28 சாலொமோன் தனக்குக் குதிரைகளையும் புடவைகளையும் எகிப்திலிருந்து அழைப்பித்தான், ராஜாவின் வர்த்தகர் புடவைகளை ஒப்பந்த விலைக் கிரயத்திற்கு வாங்கினார்கள்.
II. அதிகாரங்கள் 12 முதல் 16: ராஜ்யம் இரண்டாகப் பிரிக்கப்படுதல்
1. ரெகொபெயாமும் யெரொபெயாமும் (12-14)
2. ஆகாபுக்கு மாறுதல் (15-16)
III. அதிகாரங்கள் 17 முதல் 22: எலியாவும் ஆகாபும்
1. பஞ்சம் (17)
2. பாகால்களோடு மோதுதல் (18)
3. தேவனுடைய அமைதியான மெல்லிய சத்தம் (19)
4. சீரியார்கள் (20)
5. நெபோயாத்தின் திராட்சைத் தோட்டம்- யேசபேல் (21)
6. ஆகாபின் முடிவு (22)
2 ராஜாக்களின் தொகுப்பு:
(மொத்தம் 25 அதிகாரங்கள் 4 பகுதிகளாகப் பிரிக்கலாம்)
I. அதிகாரங்கள் 1 முதல் 8 எலிசா
1. எலியாவிடமிருந்து எலிசாவுக்கு மாற்றம் (1-2)
2. மோவாபின் அழிவு (3)
3. நாகமானின் குஷ்டரோகம் (5)
4. சீரிய படையெடுப்பு (6-7)
II. அதிகாரங்கள் 9-11 ஆகாப் ராஜாவுடைய வம்சத்தின் முடிவு
III. அதிகாரங்கள் 12 முதல் 17 யோவாஸ் முதல் இஸ்ரவேலின் முடிவு வரை
1. யோவாஸ் ராஜா (12)
2. பல்வேறுபட்ட ராஜாக்கள் (13-16)
3. இஸ்ரவேல் அழிக்கப்படுதல் (17)
IV. அதிகாரங்கள் 18 முதல் 25 எசேக்கியா முதல் யூதாவின் முடிவுவரை
1. எசேக்கியா ராஜா (13-20)
2. மனாசே (21)
3. யோவாஸ் (22-23)
4. யூதா அழிக்கப்படுதல் (24-25)
ராஜாக்களின் புத்தகத்தில் "கர்த்தருடைய பார்வைக்கு" என்பது முக்கிய வார்த்தையாக இருக்கிறது (1ராஜா-3: 10, 6: 11). இந்த வார்த்தை பழையஏற்பாட்டில் மொத்தம் 88 முறை வருகிறது, இதில் ராஜாக்களின் புத்தகத்தில் மாத்திரம் 43 முறை வருகிறது. தேவனின் பார்வை எப்போதும் எல்லாவற்றின்மீதும் இருப்பதை இது காட்டுகிறது.
Comments
Post a Comment