யோவான் எழுதிய முதலாவது, 2ஆவது, 3ஆவது கடிதங்கள்
யோவான் எழுதிய முதலாவது, 2ஆவது, 3ஆவது கடிதங்கள்
I. முகவுரை (ஆசிரியர் மற்றும் அவருடைய வாழ்த்து)
II. கடிதத்தின் செய்தி (எழுதியதன் நோக்கம்)
III. முடிவுரை (வாழ்த்து, நன்றி)
முகவுரை:
இந்த 3 கடிதங்களிலும், இவைகளை எழுதிய ஆசிரியருடைய பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆயினும், முதல் 4 நூற்றாண்டுகள் வரையில், இதை யோவான்தான் எழுதினார் என்பதை யாருமே மறுக்கவில்லை. யோவான் 5 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவைகள் கி.பி.85 முதல் 90களில், யோவான் எபேசுவில் இருந்தபோது எழுதப் பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஆசிய மைனரிலிருந்த தான் கண்காணித்து வந்த சபைகளுக்கு இவைகளை எழுதி அனுப்பியிருக் கவேண்டும்.
யோவான் எழுதிய முதல் கடிதம்
கடிதத்தின் செய்தி:
இந்தப் புத்தகம் குறிப்பாக உண்மையான கிறிஸ்தவர்களை, கிறிஸ்துவர்கள் இல்லாதவர்களிடம் இருந்து வேறுபடுத்துகிற ஒரு பாடமாக இருக்கிறது. குறைந்தது 14 சோதித்துப் பார்த்தல்களாவது இதிலே கொடுக்கப் பட்டிருக்கின்றன. நம்மையே சோதித்து ஆராய்ந்து பார்ப்பதற்கும், பிறரைக்குறித்து சோதித்து அறிவதற்கும் இவைகளை நாம் பயன் படுத்திக் கொள்ளலாம்.
1. நமக்குப் பாவமில்லையென்று சொல்வது, நம்மையே வஞ்சிப்பதாகும் (1: 8)
2. நாம் பாவம் செய்யவில்லை என்று சொல்வது, தேவனைப் பொய்யராக்குவதாகும் (1: 10)
3. அவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்லி, அவரது கற்பனையைக் கைள்ளாதிருப்பது, நம்மை பொய்யராக்குகிறது (2: 3-4)
4. ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லி சகோதரனைப் பகைத்தல், இருளிலே இருப்பதாகும் (2: 9-11)
5. உலகத்தில் அன்புகூர்தல், பிதாவின் அன்பு இல்லை (2: 15)
6. நம்மைவிட்டு பிரிந்துபோகிறவர்கள், நம்முடையவர்களாக இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது (2: 19)
7. இயேசுவை கிறிஸ்து அல்ல என்று மறுதலித்தல் (2: 22-23, 4: 15), பிதாவை உடையவனல்ல.
8. துவக்கத்திலிருந்து கேட்டவைகளில் நிலைத்திருத்தல் (2: 24)
9. நீதியைச் செய்துவாழ்தல் (2: 29, 3: 10) நீதியைச் செய்யாதவன் தேவனால் உண்டானவனல்ல.
10. அவர் நம்மில் நிலைத்திருப்பதைச் சாட்சியிடுபவர் ஆவியானவர் (3: 24)
11. அப்போஸ்தலரின் போதனைகளுக்கு செவிகொடுத்தல் (4: 5-6)
12. இயேசுவே கிறிஸ்து என்று விசுவாசித்தல் (5: 1, 3: 23, 5: 13)
13. நித்திய ஜீவனுக்கு, குமாரனை உடையவர்களாக இருத்தல் (5: 11-12)
14. பாவத்திற்குட்படாமல் நம்மைக் காத்து வாழ்தல் (5: 18). அப்பொழுதுதான் பொல்லாங்கன் தொடான்.
அன்பைக்குறித்தும் (46 முறை), அறிதலைக்குறித்தும் (35 முறை) இந்தப் புத்தகம் அதிகமாக வலியுறுத்துகிறது. நமக்கும் தேவனுக்கும் இடையேயான உறவும், நமக்கும் பிறருக்கும் இடையேயான உறவும் இப்புத்கத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
•1யோவா-3: 11 நாம் ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது.
•1யோவா-4: 7 பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாய் இருக்கக்கடவோம், ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது, அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
•1யோவா-5: 20 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்து கொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறார் என்றும் அறிவோம், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்தியம் உள்ளவருக்குள்ளும் இருக்கிறோம், இவரே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறார்.
யோவான் எழுதிய முதல் கடிதத்தின் தொகுப்பு:
I. அதிகாரம்-1: 1-4 முகவுரை
1. நாங்கள் கிறிஸ்துவுக்கு சாட்சிகள் என்று தெளிவுபடுத்துகிறார் (1: 1-2)
•1: 1 ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாய் இருக்கிற ஜீவ வார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
அ. நித்திய கிறிஸ்து
ஆ. பூமிக்குவந்த கிறிஸ்து
2. ஐக்கியத்தின் சந்தோஷம் (1: 3-4)
எழுதியதன் நோக்கம்: 1: 4 உங்கள் சந்தோஷம் நிறைவாய் இருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்.
II. அதிகாரம்-1: 5 முதல் 2: 2 வரை: ஐக்கியத்திற்குத் தேவையான நிபந்தனைகள்:
1. தேவனுடைய தன்மை (1: 5)
•1: 5 தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை, இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.
2. அவரோடு ஐக்கியப்படுவோர் அவருடைய தன்மையோடும் ஐக்கியப்படவேண்டும் (1: 6-7)
•1: 7 அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப் பட்டிருப்போம், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
3. அவரோடு ஐக்கியமாக இருத்தல் பாவத்தின் உண்மையை வலியுறுத்துகிறது (1: 8-10)
•1: 8-10 நமக்குப் பாவமில்லை என்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாய் இருப்போம், சத்தியம் நமக்குள் இராது. 9. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராய் இருக்கிறார். 10. நாம் பாவஞ்செய்யவில்லை என்போமானால், நாம் அவரைப் பொய்யர் ஆக்குகிறவர்களாய் இருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.
4. பாவம் செய்யாதிருங்கள் (2: 1-2)
எழுதியதன் நோக்கம்:
2: 1 என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்.
III. அதிகாரம்-2: 3-27 ஐக்கியத்திற்குரிய நடத்தை
1. நாம் இயேசுவின் மாதிரியைப் பின்பற்றவேண்டும் (2: 3-6)
•2: 4 அவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாய் இருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
2. அவரோடு ஐக்கியமாக இருப்பதற்கு அன்பு அவசியம் (2: 7-11)
•2: 9-11 ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான். 10. தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலை கொண்டிருக்கிறான், அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை. 11. தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான், இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.
3. மூன்று வகைப்பட்ட குழுவுக்கு எழுதுகிறார் (2: 14-17)
•2: 12-14 பிள்ளைகளே, அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப் பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். 13. பிதாக்களே, ஆதி முதலிருக்கிறவரை நீங்கள் அறிந்து இருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே, நீங்கள் பிதாவை அறிந்து இருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். 14. பிதாக்களே, ஆதி முதலிருக்கிறவரை நீங்கள் அறிந்து இருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாய் இருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்து இருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
அ. பிள்ளைகள் (2: 1,12,13,14,18, 3: 7,18, 4: 4, 5: 21)- பாமன்னிப்பைப் பெற்றவர்கள்
ஆ. பிதாக்கள் (2: 13, 14)- தேவனை அறிகிற அறிவில் வளர்ந்தவர்கள்
இ. வாலிபர் (2: 13, 14)- ஜெயமெடுப்பவர்கள்
குறிப்பாக வாலிபர்கள் பாவஉலகத்தைவிட்டு விலகி வாழ்ந்திடவேண்டும். (உலக அமைப்பு முறைகள்)
•2: 15-16 உலகத்திலும் உலகத்தில் உள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள், ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. 15. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்தில் உள்ளவைகளெல்லாம் பிதாவினால் உண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினால் உண்டானவைகள்.
4. சத்தியத்தின் ஐக்கியம் (2: 18-27)
அ. வஞ்சகத்தின் ஐக்கியத்தினின்று விலகுங்கள் (2: 18-19)
•2: 18,22 பிள்ளைகளே, இது கடைசிக் காலமாயிருக்கிறது, அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள், அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம். 22. இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனே அல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
ஆ. உங்களுக்கு சத்தியம் எதுவென்று தெரியும் (2: 20-21)
இ. சத்தியம் இயேசுவை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது (2: 22-23)
ஈ. சத்தியம் எழுதப்பட்ட வேதவார்த்தையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது (2: 24-26)
•2: 24 ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்து இருக்கக்கடவது, ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.
உ. சத்தியம் தேவஆவியானவரை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது (2: 27)
•2: 27 நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்க வேண்டுவதில்லை, அந்த அபிஷேகம் சகலத்தையும் குறித்து உங்களுக்குப் போதிக்கிறது, அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவாpல் நிலைத்து இருப்பீர்களாக.
IV. அதிகாரம்-2: 28 முதல் 3: 24 ஐக்கியத்தின் குணாதிசயம்
அ. நீதியின் நம்பிக்கை (2: 28 முதல் 3: 3)
ஆ. நீதியின் அடிப்படை (3: 4-9)
1. பிதாவின் செயல்பாடு (3: 1-3)
•3: 1-2 நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப் படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள். 2. பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம், இனி எவ்விதமாய் இருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை, ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போம் என்று அறிந்து இருக்கிறோம்.
2. குமாரனின் செயல்பாடு (3: 4-5)
•3: 5 அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள், அவரிடத்தில் பாவமில்லை.
3. ஆவியானவரின் செயல்பாடு (3: 24)
•3: 24 அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்து இருக்கிறோம்.
4. நம்முடைய ஐக்கியமாயிருத்தலின் உறுதி எது? இரட்சிக்கப்பட்டதன் அடையாளம்:
•3: 6 அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவம் செய்கிறதில்லை, பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை. (பாவத்தில் நிலைத்திருப்பது இல்லை, பாவத்தை மனப்பூர்வமாகச் செய்வதில்லை)
•3: 8 பாவஞ்செய்கிறவன் பிசாசினால் உண்டாயிருக்கிறான், ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். (நம்மில் அழிக்கப்பட்ட பிசாசினுடைய முதல் கிரியை-பாவசுபாவம்)
•3: 10 இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும், நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.
5. ‘அன்புகூருதல்’ நம்முடைய வாழ்வின் பரீட்சையாக இருக்கிறது (3: 10-15)
6. அன்புகூருதலை செயலில் காட்டவேண்டும் (3: 16-18)
7. அன்புகூர்ந்து வாழ்வதால் கிடைக்கும் நிச்சயம் (3: 19-24)
•3: 21-22 பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியம் கொண்டிருந்து, 22. அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக் கொள்ளுகிறதது எதுவோ அதை அவராலே பெற்றுக் கொள்ளுகிறோம்.
V. அதிகாரம்-4: 1-21 ஐக்கியத்தின் எச்சரிப்புக்கள்
1. ஆவிகளைச் சோதித்து அறிதல் (4: 1-3)
†ஆவியானவரால் பேசுகிறோம் என்று சொல்கிற கள்ளப் போதர்கள், வஞ்சக ஆவிகள்
†மாம்சத்தில் வந்த இயேசுவை அறிக்கைசெய்யாத ஆவிகள்
2. உண்மையான போதகத்திற்குக் கீழ்படிந்து நடத்தல் (4: 4-6)
•4: 6 நாங்கள் தேவனால் உண்டானவர்கள், தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான், தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவி கொடுக்கிறதில்லை, இதினாலே சத்தியஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்து இருக்கிறோம்.
3. அன்பு தேவனோடு இணைக்கப்பட்டதாக இருக்கிறது (4: 7-11)
4. அன்பு தேவனோடு ஐக்கியப்படுதலில் இணைக்கப் பட்டிருக்கிறது (4: 12-16)
5. அன்பு தைரியத்தைக் கொடுக்கிறது (4: 17-19)
6. தேவனிடத்தில் அன்புகூருதல், பிறரிடத்தில் அன்புகூருதலோடும் இணைக்கப் பட்டிருக்கிறது (4: 20-21)
VI. அதிகாரம்-5: 1-21 ஐக்கியத்தின் விளைவுகள்:
1. சகோதரரிடத்தில் அன்புகூருதல் (5: 1-3)
2. நம்முடைய ஜெயம் (5: 4-5)
†5: 4-5 தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும், நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். 5. இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனே அன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
3. தேவனுடைய சாட்சியிடுதல் (5: 6-13)
அ. ஆவி, தண்ணீர், இரத்தம் (5: 6-9)
†5: 6-8 இயேசு கிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர், ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சி கொடுக்கிறவர். 7. பரலோகத்தில் சாட்சி இடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், 8. பூலோகத்திலே சாட்சி இடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப் பட்டிருக்கிறது.
ஆ. தேவனுடைய சாட்சி இயேசுவைக் குறித்தது (5: 10-13)
•தேவனுடைய சாட்சியை விசுவாசிப் பவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு.
4. ஜெபத்திற்குரிய பதிலின் நிச்சயம் (5: 14-17)
அ. நம்முடைய விண்ணப்பங்களுக் குரிய பதில் (5: 14-15)
†5: 14-15 நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவி கொடுக்கிறார் என்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். 15. நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவி கொடுக்கிறார் என்று நாம் அறிந்து இருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக் கொண்டோம் என்றும் அறிந்து இருக்கிறோம்.
ஆ. பிறருடைய பாவங்களுக்கு உரியதில் பதில் (5: 16-17)
†5: 16-17 மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல் செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார், யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே, மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல் செய்ய நான் சொல்லேன். 17. அநீதியெல்லாம் பாவந்தான், என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு.
5. பாதுகாப்பின் நிச்சயம் (5: 18-21)
†5: 18-21 தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யானென்று அறிந்து இருக்கிறோம், தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான். 19. நாம் தேவனால் உண்டாயிருக்கிறோம் என்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்து இருக்கிறோம். 20. அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறார் என்றும் அறிவோம், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்தியம் உள்ளவருக்குள்ளும் இருக்கிறோம், இவரே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார். 21. பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக் கொள்வீர்களாக. ஆமென்.
யோவான் எழுதிய 2ஆவது கடிதம்
யோவான் எழுதிய 2ஆவது கடிதத்தின் தொகுப்பு:
வேதாகமத்தின் மிகச்சிறிய புத்தகமாக இது இருக்கிறது. இதிலே மொத்தம் 13 வசனங்கள் உள்ளன. இதை யோவான்தான் எழுதினார் என்பதில் ஆதிசபைத் தலைவர்களிடையே ஒத்தகருத்து உள்ளது. இந்தப் புத்தகம் தனிநபருக்கு எழுதப்பட்டதாக இருந்தாலும், சுயநலமுள்ள, கள்ளப் போதகர்களைக் குறித்த எச்சரிப்பை யோவான் சபைக்குக் கொடுத்திருப்பதை நாம் பார்க்கமுடிகிறது. இப்படிப்பட்ட கள்ளப்போதகர்களை நமது வீடுகளில் நாம் வரவேற்கவோ, வாழ்த்துதல் சொல்லவோ வேண்டாம் என்று 2யோவான் எச்சரிப்பதையும் நாம் பார்க்கிறோம். அந்திக்கிறிஸ்துவின் வஞ்சகத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது இந்தப்புத்தகம் நமக்குக் கற்பிக்கும் பாடமாகும். சத்தியத்தை வஞ்சகத்தோடு கலப்படம் செய்யக்கூடாது.
யோவான் எழுதிய 2ஆவது கடிதத்தில்:
↻சத்தியத்தைக் குறித்து 5 முறை
↻அன்பைக் குறித்து 5 முறை
↻இயேசுவைக் குறித்து 6 முறை
↻பிதாவைக் குறித்து 6 முறை குறிப்பிடப் பட்டுள்ளன.
I. 1: 1-3 வாழ்த்து
1. உண்மையான அன்பு சத்தியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது (1-2)
•2யோவா-1: 1-2 நமக்குள் நிலைநிற்கிறதும், என்றென்றைக்கும் நம்மோடு இருப்பதுமாகிய சத்தியத்தினிமித்தம், நான் மாத்திரமல்ல, சத்தியத்தை அறிந்திருக்கிற யாவரும் சத்தியத்தின்படி நேசித்து இருக்கிறவளும், 2. தெரிந்து கொள்ளப் பட்டவளுமாகிய அம்மாளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும், மூப்பனாகிய நான் எழுதுகிறதாவது:
அம்மாள் என்பதற்கு ஆங்கிலத்தில் Lady என்று உள்ளது. அதாவது ஒரு பெண் என்று அர்த்தமாகும். இது சபையிலிருந்த பலரால் நேசிக்கப்பட்ட ஒரு தனிநபருக்கு எழுதப்பட்டதாக இருக்கிறது. அவளுடைய பிள்ளைகள் என்பது குடும்பத்தினரை உள்ளடக்குகிற வார்த்தையாக நாம் பார்க்கிறோம். யோவான் தன்னை ஒரு மூப்பராக அடையாளப் படுத்தி இருக்கிறார். இந்தநேரத்தில் யோவான் 100 வயதை நெருங்கிக் கொண்டிருந்தார். முதிர்வயதிலும் சபை ஊழியம் என்ற தரிசனம் அவருக்குள் மங்காமல் இருந்ததை இது வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. வயதாகிவிட்டது என்பதற்காக சபை தரிசனத்தையோ அல்லது தேவனுடைய மந்தைகைளைக் குறித்த பொறுப்பையோ யோவான் விட்டுவிடவில்லை. ஊழியத்திற்கு வயதுவரம்பு என்பது இல்லை. உயிர் இருக்கும்வரை ஊழியம் செய்திட நாம் அழைக்கப் பட்டிருக்கிறோம்.
2. தேவனின் ஆசீர்வாதங்கள் சத்தியத்திலும் அன்பிலும் இருக்கிறது (1: 3)
•கிருபை, இரக்கம், சமாதானம்
II. 1: 4-11 சத்தியத்தையும் அன்பையும் முறைப்படி நடைமுறைப்படுத்துதல்
1. சத்தியத்திலே நடப்பதைக்குறித்த சந்தோஷம் (1: 4)
†1: 4 பிதாவினால் நாம் பெற்ற கற்பனையின்படியே உம்முடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதை நான் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டேன்.
2. அன்பிலே நடவுங்கள் (1: 5-6)
†1: 5-6 இப்பொழுதும் அம்மாளே, நாம் ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டுமென்று, உமக்குப் புதிய கற்பனையாக எழுதாமல், ஆதிமுதல் நமக்கு உண்டாயிருக்கிற கற்பனையாக எழுதி, உம்மை வேண்டிக் கொள்ளுகிறேன். 6. நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு, நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்து கொள்ளவேண்டிய கற்பனை இதுவே.
3. அநேக வஞ்கர்கள் தோன்றி இருக்கிறார்கள் (1: 7-9)
†1: 7-9 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றி இருக்கிறார்கள், இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக் கிறிஸ்துவுமாய் இருக்கிறான். 8. உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாய் இருங்கள். 9. கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்து இருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.
4. வஞ்சகப் போதகர்களோடு நடக்க வேண்டாம் (1: 10-11)
†1: 10-11 ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டு வராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக் கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். 11. அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க் கிரியைகளுக்கும் பங்கு உள்ளவனாகிறான்.
கள்ளப் போதனைகளைக் கொண்டு வருபவர்களை ஏற்றுக்கொள்தல், அவர்களுக்கு வாழ்த்து சொல்லுதல் என்பது, நீங்கள் காரில் செல்லும்போது, வழியில் பிசாசு நிற்கையில், அவனை உங்கள் காரில் ஏறிச்சொல்வதற்குச் சமம். அவனை ஏற்றிக்கொண்டால், சிறிதுநேரம் கழித்து, உங்கள் காரை நான் ஓட்டுகிறேன் என்று அவன்கேட்க ஆரம்பித்துவிடுவான்.
III. 1: 12-13 இறுதி வாழ்த்து
†1: 12-13 உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு, காகிதத்தினாலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனதில்லை. உங்களுடைய சந்தோஷம் நிறைவாய் இருக்கும்படிக்கு உங்களிடத்தில் வந்து, முகமுகமாய் பேசலாமென்று நம்பியிருக்கிறேன். 13. தெரிந்து கொள்ளப்பட்ட உம்முடைய சகோதரியின் பிள்ளைகள் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். ஆமென்.
யோவான் எழுதிய 3ஆவது கடிதம்
யோவான் எழுதிய 3ஆவது கடிதத்தின் தொகுப்பு:
இதில் மொத்தம் 14 வசனங்கள் உள்ளன. புதியஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவைக் குறித்து ஒருமுறைகூட குறிப்பிடப்படாத ஒரே புத்தகம் இதுதான். அன்பு மற்றும் சத்தியத்திற்கான ஊக்கப்படுத்துதலின் புத்தகமாக இது இருக்கிறது. இதிலே 3 நபர்களைக்குறித்து குறிப்பிட்டுக் காட்ப்பட்டுள்ளது.
1. காயு (1: 1- பிரியமுள்ள காயு)
2. தியோத்திரேப்பு (1: 9 முதன்மையாய் இருக்க விரும்புகிற தியோத்திரேப்பு)
3. தேமேத்திரியு (1: 12 எல்லாராலும் நற்சாட்சி பெற்றதுமல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சிபெற்ற தேமேத்திரியு)
யோவான் எழுதிய 3ஆவது கடிதத்தில்:
∗சத்தியத்தைக் குறித்து 6 முறை
∗அன்பைக் குறித்து 6 முறை
∗தேவனைக் குறித்து 4 முறை குறிப்பிடப் பட்டிருக்கிறது.
யோவான், தான் எழுதிய 3 கடிதங்களிலும், முதல் அதிகாரத்தின் 4அவது வசனத்தில் சந்தோஷத்தைக் குறித்து எழுதியிருக்கிறார்.
•1யோவா-1: 4 உங்கள் சந்தோஷம் நிறைவாய் இருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்.
•2யோவா-1: 4 பிதாவினால் நாம் பெற்ற கற்பனையின்படியே உம்முடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதை நான் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டேன்.
•3யோவா-1: 4 என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.
I. 1-8 காயுவைக்குறித்த பாராட்டு
•1: 1-8 மூப்பனாகிய நான் சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான காயுவுக்கு எழுதுகிறதாவது: 2. பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன். 3. சகோதரர் வந்து நீ சத்தியத்தில் நடந்து கொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக் குறித்துச் சாட்சி கொடுத்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன். 4. என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை. 5. பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய். 6. அவர்கள் உன்னுடைய அன்பைக் குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சி சொன்னார்கள், தேவனுக்கு முன்பாகப் பாத்திரமானபடி அவர்களை நீ வழிவிட்டனுப்பினால் (தேவை யானவைகளைக் கொடுத்து அனுப்புதல்) நலமாயிருக்கும். 7. ஏனெனில் அவர்கள் புறஜாதியாரிடத்தில் ஒன்றும் வாங்காமல் அவருடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப் போனார்கள். 8. ஆகையால் நாம் சத்தியத்திற்கு உடன் வேளையாட்களாய் இருக்கும்படி அப்படிப் பட்டவர்களைச் சேர்த்துக் கொள்ளக் கடனாளிகளாய் இருக்கிறோம்.
அ. சத்தியத்திலே நடக்கும் உண்மையைக் குறித்து சாட்சி (1: 3)
ஆ. செய்கையைக்குறித்து சாட்சி (1: 5)
இ. அன்பைக்குறித்து சாட்சி (1: 6)
II. 1: 9-11 தியோத்திரேப்புவின் பெருமை:
•1: 9-11 நான் சபைக்கு எழுதினேன், ஆனாலும் அவர்களில் முதன்மையாய் இருக்க விரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. 10. ஆனபடியால், நான் வந்தால், அவன் எங்களுக்கு விரோதமாய்ப் பொல்லாத வார்த்தைகளை அலப்பி, செய்துவருகிற கிரியைகளை நினைத்துக் கொள்வேன். அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல் தான் சகோதரரை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறதுமன்றி, ஏற்றுக்கொள்ள மனதாய் இருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்குப் புறம்பே தள்ளுகிறான். 11. பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான், தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை.
1. சபையில் முதன்மையாக இருப்பதை விரும்புதல் (1: 9)
2. சபையின் அதிகாரத்தில் உள்ளவர்களை ஏற்றுக்கொள்ளாமை (1: 9)
3. சபையின் அதிகாரத்தில் உள்ளர்களுக்கு விரோதமாகப் பேசுதல் (1: 10)
4. சபையில் சகோதரர்களை ஏற்றுக்கொள்ளாமை (1: 10)
5. சபையில் சகோதரரை ஏற்றுக்கொள்ள விரும்புபவர்களையும் தடைசெய்தல் (1: 10)
6. சபையில் உபசரிக்கும் உள்ளத்தாரை சபைவிட்டு தள்ளிவைத்தல் (1: 10)
7. தேவனைக் காணாதவன் (1: 11)
III. 1: 12 தேமேத்திரியுவின் நற்சாட்சி
•1: 12 தேமேத்திரியு எல்லாராலும் நற்சாட்சி பெற்றதுமல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சி பெற்றவன், நாங்களும் சாட்சி கொடுக்கிறோம், எங்கள் சாட்சி மெய்யென்று அறிவீர்கள்.
IV. 1: 13-14 முடிவுரை
•1: 13-14 எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு, ஆனால் மையினாலும் இறகினாலும் எழுத எனக்கு மனதில்லை. 14. சீக்கிரமாய் உன்னைக் காணலாமென்று நம்பியிருக்கிறேன், அப்பொழுது முகமுகமாய்ப் பேசிக்கொள்ளுவோம். உனக்குச் சமாதானம் உண்டாவதாக. சிநேகிதர் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். சிநேகிதரைப் பேர்பேராக வாழ்த்துவாயாக.
Comments
Post a Comment