அப்போஸ்தல நடபடிகள்


அப்போஸ்தல நடபடிகள் குறித்த பார்வை:

I. எழுதிய ஆசிரியர்
II. எழுதப்பட்ட காலம்
III. இந்தப் புத்தகத்தின் நோக்கம்

1. எழுதிய ஆசிரியர்: லூக்கா

லூக்கா என்று நாம் ஏற்கெனவே அறிந்தோம்.

2. எழுதப்பட்ட காலம்:

கி.பி.62ஆக இருக்கலாம். பவுலின் கடைசி 2 வருட சிறையிருப்பு மற்றும் மரணத்திற்கு முன்பு இது எழுதப்பட்டிருக்க வேண்டும்.

3. இந்தப் புத்தகத்தின் நோக்கம்:

கிறிஸ்தவம் எவ்வாறாக, எங்கும் பரவியது என்பதைக் காண்பித்தல் இந்தப் புத்தகத்தின் நோக்கமாக இருக்கிறது. பேதுரு மற்றும் பவுலின் ஊழியங்களாலும், பிரசங்கங்களாலும் மாத்திரமல்ல, மற்ற அப்போஸ்தலர்களாலும் கிறிஸ்தவம் எங்கும் பரவியது என்பதை நாம் மறக்கவேண்டாம். ஆனால் இந்தப் புத்தகம் குறிப்பாக அப்போஸ்தலர்களாகிய பேதுரு மற்றும் பவுலுடைய ஊழியங்களைக் கவனித்தில் கொண்டிருக்கிறது. மற்ற அப்போஸ்தலர்களில்:
தோமா-பார்த்தியாவுக்கும் பிறகு இந்தியாவுக்கும்
அந்திரேயா-ஸ்கீதியாவுக்கு
யோவான்-ஆசியாவுக்கு
மத்தேயு-எத்தியோபியாவுக்கு
மற்றவர்கள் இன்னும் பல்வேறு பகுதிகளுக்கு சுவிசேஷத்தைக் கொண்டு சென்றார்கள்.
ரோமாபுரிக்குள்ளும் சுவிசேஷம் எவ்வாறு கொண்டு செல்லப்பட்டது என்பதைக்குறித்த சரித்திரப் பதிவை இந்தப் புத்தகம் முக்கியப்படுத்துவதாக இருக்கிறது. சபைகளுக்கு எழுதப்பட்ட நிரூபங்களின் வேத வசனங்களுக்கான பிண்ணனியை நமக்குக் கொடுப்பதற்காக, தேவன் இந்தப் புத்தகத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்று நாம் அறிந்துகொள்கிறோம்.
இது குறிப்பாக அப்போஸ்தலர்கள் பேதுருவையும் பவுலையும் சுற்றிவருவதாக இருக்கிறது என்று நாம் பார்த்தோம். அதினடிப்படையில் இதை 2 பாகமாக நாம் பிரிக்கலாம்.
அதிகாரங்கள் 1 முதல் 12 பேதுருவின் நடபடிகள்
அதிகாரங்கள் 9, 13 முதல் 28 பவுலின் நடபடிகள்.
மேலும் அப்போஸ்தலர்-1: 8ல் சொல்லப்பட்டதற்கு ஏற்ப சுவிசேஷம் கொண்டு செல்லப்படுதலின் விரிவாக்கத்திற்கு ஏதுவாகவும் இது பிரித்துப் பார்க்கப்படலாம்.
அப்-1: 8 பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
எருசலேமில் (அப்-1 முதல் 6: 7 வரை)
யூதேயாவிலும் சமாரியாவிலும் (அப்-6: 8 முதல் 9: 31 வரை)
பூமியின் கடைசிபரியந்தம் (அப்-9: 32 முதல் 28 வரை)

அப்போஸ்தல நடபடிகளின் சில முக்கிய தலைப்புக்கள்:

1. பரிசுத்த ஆவியானர்: சுமார் 56 முறை பரிசுத்த ஆவியானவரைக் குறித்து நாம் இந்தப் புத்தக்தில் பார்க்கிறோம். பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுதல், பெலப்படுதல், வழிநடத்தப்படுதல், ஏவப்படுதல், தடுக்கப்படுதல் போன்ற செயல்பாடுகளை இது நமக்கு முக்கியப்படுத்திக் காண்பிக்கிறது.
பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளே வருதல் (இரட்சிக்கப் பட்டபோது)
பரிசுத்த ஆவியின் அபிஷேகம் நம்மேல் வருதல் (ஊழியம் செய்யும்போது)
லூக்-3: 16 யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்தஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார்.
யோவா-14: 16-17 நான் பிதாவை வேண்டிக் கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். 17. அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
ஆவியானவரால் நடத்தப்படுதல்
ரோம-8: 14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப் படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராய் இருக்கிறார்கள்.
2. சபையையும், தமது ஊழியர்களையும் தேவன் அற்புதமாகப் பாதுகாத்தல், விடுவித்தல்
3. சபையார் எங்கும்சென்று சுவிசேஷம் அறிவித்தது
4. யூதருக்கும், புறஜாதியாருக்கும் இரட்சிப்பு வெளிப்படுதல்.
பேதுரு மற்றும் பவுலின் ஊழியங்களை விவரிக்கும் 2 பாகங்களில் உள்ள சில ஆச்சரியமான ஒப்புமைகள்

நம்முடைய வாழ்வில் வேதவசனங்களை நாம் எவ்வாறு நடைமுறைப் படுத்திட வேண்டும் என்ற முன்மாதிரியை அப்போஸ்தல நடபடிகள் நமக்குக் காட்டுகிறது. முழுப்புத்தகத்திலும் யாவரும் இரட்சிக்கப்படவேண்டும் என்ற சுவிசேஷத்தை இது வலியுறுத்துகிறது. மனந்திரும்புதல், ஞானஸ்நானம், விசுவாசித்தல், மனதை மாற்றுதல், கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுதல் போன்றவைகள் இரட்சிப்பின் செய்கைகளுக்கு உரியவைகளாக விவரிக்கப்பட்டுள்ளன.

அப்போஸ்தல நடபடிகளின் தொகுப்பு:

(மொத்தம் 28 அதிகாரங்கள் உள்ளன. 3 பகுதிகளாகப் பிரிக்கலாம்)
I. அதிகாரம் 1: 1-14 முகவுரை
1. உன்னத வல்லமையைக் குறித்த வாக்குத்ததம் (1: 1-8)
2. இயேசு பரலோகத்திற்கு எழுந்தருளிச் செல்லுதல் (1: 9-11)
3. ஜெபம் (1: 12-14)
II. அதிகாரங்கள் 1: 15 முதல் 12: 24 பேதுருவின் சம்பவங்கள்
1. யூதாஸுக்குப் பதிலாக மத்தியாஸ் நியமிக்கப்படுதல் (1: 15-26)
2. பெந்தெகோஸ்தே நாள் பிரசங்கமும், பலனும் (2: 1-47)
3. சாலொமோன் மண்டபத்தில் பிரசங்கமும், விளைவும் (3: 1 முதல் 4: 31)
4. ஆவியானவரின் வல்லசெயல்கள் (4: 32 முதல் 5: 16)
அப்-5: 1-4 அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள். 2. தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான். 3. பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? 4. அதை விற்குமுன்னே அது உன்னுடையதாய் இருக்கவில்லையோ? அதை விற்றபின்பும் அதின் கிரயம் உன் வசத்திலிருக்க வில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டது என்ன? நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.
5. சிறையும் விடுதலையும் (5: 17-42)
6. ஸ்தேவானின் மாபெரும் பிரசங்கம் (6: 1 முதல் 8: 3)
7. சமாரியாவுக்கும் யூதேயாவுக்கும் சுவிசேஷம் பரவுதல் (8: 4-40)
8. இயேசு சவுலைப் பிடித்தல் (9: 1-31)
9. ஆச்சரியமான அற்புதங்கள் (9: 32-43)
10. கோர்நேலியு (10-11)
அப்-10: 24,27,33,44 கொர்நேலியு தன் உறவின் முறையாரையும், தன்னுடைய விசேஷித்த சிநேகிதரையும் கூடவரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான். 27. அவனுடனே பேசிக்கொண்டு, உள்ளேபோய், அநேகர் கூடி வந்திருக்கிறதைக் கண்டு, 33. நீர் வந்தது நல்லகாரியம், தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட யாவையும் கேட்கும்படிக்கு, நாங்கள் எல்லாரும் இப்பொழுது இங்கே தேவசமுகத்தில் கூடியிருக்கிறோம் என்றான். 44. இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக் கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
11. சிறையும் விடுதலையும் (12: 5-19)
12. ஏரோதின் மரணம் (12: 20-24)
III. அதிகாரங்கள் 12: 25 முதல் 28: பவுலின் சம்பவங்கள்
1. முதல் மிஷனரிப் பயணம் (12: 25 முதல் 14: 28)
அ. சீப்ரு தீவிற்கு (13: 4-12)
ஆ. அந்தியோகியாவிற்கு- பிஸிதியாவில் (13: 13-52)
இ. இக்கோனியாவுக்கு (14: 1-7)
ஈ. லிஸ்திராவுக்கு (14: 8-20)
உ. தெர்பைக்கு (14: 21)
ஊ. மீண்டும் அந்தியோகியாவுக்கு (14: 21-28)
2. எருசலேம் சங்கத்தில் (15: 1-35)
அப்-15: 20 விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசி ஆனவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருங்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுத வேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன்.
3. இரண்டாவது மிஷனரிப் பயணம் (15: 36 முதல் 16: 5)
அ. கூடச் செல்பவர்களைத் தெரிந்தெடுத்தல் (15: 36 முதல் 16: 5)
ஆ. பிலிப்பி பட்டணத்திற்கு (16: 6-40)
இ. தெசலோனிக்கே யாவுக்கு (17: 1-9)
ஈ. பெராயாவுக்கு (17: 10-14)
அப்-17: 11 அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாய் இருந்தார்கள்.
உ. அத்தேனே பட்டணத்திற்கு (17: 15-34)
அப்-17: 23 எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக் குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன், நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
ஊ. கொரிந்துவுக்கு (18: 1-17)
4. மூன்றாவது மிஷனரிப் பயணம் (18: 23 முதல் 21: 16)
அப்-19: 13-16 அப்பொழுது தேசாந்தாரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதாஸால் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள் மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். 14. பிரதான ஆசாரினாகிய ஸ்கேவா என்னும் ஒரு யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள். 15. பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, 16. பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும், காயப் பட்டவர்களுமாகி அந்த வீட்டைவிட்டு ஓடிப்போனார்கள்.
அ. எபேசுவுக்கு (18: 23 முதல் 19: 41)
ஆ. ஐரோப்பாவுக்கு (20: 1-3)
இ. துரோவாவுக்கு (20: 4-12)
ஈ. மிலேத்துவுக்கு ((20: 13-28)
உ. எருசலேமிற்கு (21: 1-16)
5. எருசலேமிலும் யூதேயாவிலும் (21: 17 முதல் 26: 32)
6. ரோமாபுரிக்குப் பயணம் (27: 1 முதல் 28: 31)
அ. கிரேத்தா தீவில் (27: 1-8)
ஆ. மெலித்தா தீவில் (27: 9 முதல் 28: 10)
இ. ரோமாபுரிக்கு (28: 11-31)

முக்கிய வசனங்கள்:

அப்-1: 8 பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது, நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
அப்-4: 33 கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தர்கள், அவர்களெல்லார் மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது.

Comments