கலாத்தியருக்கு எழுதப்பட்ட கடிதம்


கலாத்தியருக்கு எழுதப்பட்ட கடிதம் குறித்த பார்வை:

I. யார் எழுதியது? எழுதிய ஆசிரியர்
II. யாருக்கு எழுதப்பட்டது? எழுதப்பட்ட மக்கள்
III. எதற்காக எழுதப்பட்டது? எழுதப்பட்டதன் நோக்கம்

எழுதிய ஆசிரியர்: பவுல்

கலா-1: 1-2 மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும், 2. என்னுடனேகூட இருக்கிற சகோதரரெல்லாரும் எழுதுகிறதாவது.
தன்னுடைய அப்போஸ்தல ஊழியத்தின் பிறப்பிடத்தையும், ஆதாரத்தையும் பவுல் விவரிப்பதை ஒவ்வொரு கடிதத்திலும் நாம் பார்க்கமுடிகிறது. அப்போஸ்தல ஊழியம் என்பது மனிதராலோ, அல்லது மனிதர்கள் மூலமாகவோ கொடுக்கப்பட்டதாக இருக்கக்கூடாது. மாறாக இயேசு கிறிஸ்துவாலும், பிதாவாகிய தேவனாலும் அது கொடுக்கப்படுதலாக இருக்கவேண்டும். தன்னோடு இருந்த உடன்ஊழியர்களை, சகோதரர்கள் என்று பவுல் அழைக்கிறார். கிறிஸ்துவுக்குள் மறுபடி பிறந்த மக்களெல்லாரும் நமக்குச் சகோதரரும், சகோதரிகளும் என்ற உறவுக்குரியவர்களாக இருக்கிறார்கள்.
சபைகளுக்கு பல கடிதங்களை எழுதுவதற்கு பவுல் யாரையாவது பயன்படுத்தி எழுதியனுப்பினார். ஆனால் இந்தக் கடிதமோ தன் சொந்தக்கையாலே எழுதப்பட்டது என்று பவுல் குறிப்பிட்டிருக்கிறார்.
கலா-6: 11 என் கையெழுத்தாய் எவ்வளவு எழுதினேனென்று பாருங்கள்.

எழுதப்பட்ட மக்கள்:

கலா-1: 2 கலாத்தியா நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது.
கால் (Gaul) அல்லது கெல்தியர்கள் (Celitans) என்ற மக்கள் குடியிருந்த பகுதி என்பதிலிருந்து கலாத்தியா என்ற பெயர் வருகிறது. கலாத்தியா என்பது ஒரு தனிப்பட்ட ஊரின் பெயரல்ல, மாறாக பல மாகாணங்களை உள்ளடக்கிய ஒரு நாடாகும். இப்பொழுது இருக்கும் முன்பு கலாத்தியா நாடு இப்பொழுது நவீன துருக்கி என்று அழைக்கப்படுகிறது. இது 4 முக்கிய மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
1. ஃபிரிஜியா
2. லிகோனியா
3. கப்பதோகியா
4. பிஸிதியா

கலாத்தியா நாட்டின் முக்கியப் பட்டணங்களாக இருந்தவைகள்:

1. அந்தியோகு
2. இக்கோனியம்
3. லீஸ்திரா
4. தெர்பை
தன்னுடைய முதல் மிஷனரிப்பயணத்தின்போது, இந்தப் பகுதிகளிலே தான் நிறுவின சபைகளுக்கு பவுல் இந்தக் கடிதத்தை எழுதியனுப்பினார். கலாத்தியா நாட்டின் சபைகளிலிருந்த அதிகபட்ட விசுவாசிகள் யூதர்களல்லாத புறஜாதி மக்களாக இருந்தார்கள். இந்த சபைகளில் சில யூதவிசுவாசிகளும் இருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. கலாத்தியா நாட்டு மக்கள் புதிதான காரியங்களுக்கு மாறுவதிலும், எளிதில் நம்பப்படக்கூடியவர்கள் அல்ல, என்பதிலும் பெயர்போனவர்களாக இருந்தார்கள். புதியபுதிய உபதேசங்கள் வரும்போது எளிதில் அவைகளால் திசைமாறுதலுக்குள் சென்றிட அது வழிவகுத்தது.

உதாரணத்திற்கு

ஒருமுறை லீஸ்திராவில் பவுல் ஒருநாள் காலையில் ஒரு சப்பாணியை நடக்குச்செய்தபோது, அந்தப்பகுதி மக்கள் அவனைத் தெய்வத்துக்குச் சமமாக மதித்து அவளைப் பணிந்துகொள்ள வந்தார்கள். ஆனால் அதேநாள் மாலையில், அதே ஊரார் அவனைக் கல்லால் எறிந்தார்கள். பவுலால் எழுதப்பட்ட முதலாவது கடிதம் இதுவே என்று பலர் கருதுகிறார்கள். கலாத்திய சபைகளுக்கு எழுதப்பட்ட கடிதத்திற்கான பிண்ணனியைக்குறித்து அறிந்துகொள்ள அப்போஸ்தல நடபடிகள் 13: 13 முதல் 14: 25 வரையுள்ள பகுதிகளை வாசித்துப் பாருங்கள். பவுலும் பர்னபாவும் அந்தியோகியா மற்றும் பிஸிதியாவுக்கு வந்து அங்கே ஊழியம் செய்தார்கள். இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக்குறித்து பிரசங்கம் பண்ணினார்கள். தேவசனம் எங்கும் பரவி விருத்தியடைந்தது என்று வாசிக்கிறோம். இதினிமித்தம் யூதர்கள் பொறாமையடைந்து அவர்களை அங்கிருந்து துரத்திவிட்டார்கள்.

பவுல் எழுதின கடிதங்களை வரிசைப்படி பார்த்தால்:

முதலாவது கடிதம், கலாத்தியருக்கு எழுதப்பட்டது, கி.பி. 49-50ல் .து எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று பலர் கருதுகிறார்கல்.
2ஆவது மற்றும் 3ஆவது கடிதங்கள், 1 மற்றும் 2 தெசலோனிக்கேயருக்கு எழுதியது.
1கொரிந்தியர் 4ஆவது கடிதம்
2கொரிந்தியர் அவரால் எழுதப்பட்ட 5ஆவது கடிதமாகும். இது கி.பி.56களில் எழுதப்பட்டிருக்கவேண்டும்,

எழுதப்பட்டதன் நோக்கம்:

அநேக புறுஜாதிகள் இரட்சிக்கபட்ட சபையில் சேர்க்கட்டார்கள். ஆனால் யூதமார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் ஊழியர்கள் என்ற பெயரில் உள்ளேவந்து, புறஜாதிகள் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு விருத்தசேதனம் செய்திடவேண்டும் என்று போதித்து, இந்தப் பகுதிகளிலிருந்து பல சபைகளின் விசுவாசிகளை இடறச்செய்துகோண்டிருந்தர்கள். உறுதியான மேய்ப்பர்கள் சபையில் இல்லாவிடில், விசுவாச மக்கள் எளிதில் இடறுவதற்கும் வழிவிலகுவதற்கும் அது காரணமாகும். நாங்கள் ஆழமான சத்தியத்தைக் கற்றுக்கொடுக்கிறோம் என்று எத்தனையோ நபர்கள், பலரை இடறப்பண்ணுதல் உலகமெங்கும் கிறிஸ்தவர்கள் மத்தியில் இன்றைக்கும் காணப்பட்டுக்கொண்டிருக்கிறது.
பவுல் சபைமக்களை அதிகமாக நேசித்ததால், தவறான உபதேசங்களுக்கு அவர்களைத் தப்புவிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடே இந்தக் கடிதத்தை அவர்களுக்கு எழுதினார். கிருபையின் மூலமாக இரட்சிக்கப்பட்ட வாழ்வைக்குறித்த தெளிவை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்பது இந்தக் கடிதத்தில் பவுலின் குறிக்கோளாக இருந்தது. மீண்டும் பழைய பாரம்பரியமான நியாயப்பிரமாண அடிமைத்தனத்திற்குள் செல்லாமல், இயேசு கிறிஸ்துவுக்குள் பெற்றுக்கொண்ட இரட்சிப்பின் சுதந்திரத்தில் நிலைத்திருக்கும்படி வலியுறுத்துகிறார். நம்முடைய கிரியைகளால் நாம் இரட்சிக்கப்படவில்லை, மாறாக தேவனுடைய கிருபையாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை விவரிக்கும் புத்தகமாக கலாத்தியருக்கு எழுதப்பட்ட கடிதம் இருக்கிறது.
இந்தப் புத்தகத்தைப் புரிந்துகொள்ளுதல் கடினமானதாக இல்லை. கிறிஸ்தவ வாழ்வை நாம் எவ்வாறு வாழ்ந்திட வேண்டும்? ஒரு கிறிஸ்தவன் எவ்வாறு வாழவேண்டும்? என்ற கேள்விக்குறிய பதிலை இது நமக்குக் கொடுக்கிறது. அதற்குப் பதில் என்னவென்றால்: சுயத்திற்கு மரித்தல் (கலா-2: 19-20, 5: 14). தேவனால் பெலப்படுத்தப்பட்டு, நியாயப்பிரமாண அடிமைத்தனத்திற்கு நீங்காலாகுதல் (கலா-2: 20, 5: 1, 16, 22-25). சட்டதிட்டங்களையும், திருவருட்சாதனங்களையும், சபையின் ஒழுங்குகள் என்பவைகளையும் வைத்து வாழ்வதல்ல, மாறாக கிறிஸ்துவைப் பின்பற்றி, அவரைப் பிரதிபலிப்பதுதான் உண்மையான கிறிஸ்தவமாகும்.
கலா-2: 19-20 தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே. 20. கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன், ஆயினும், பிழைத்திருக்கிறேன், இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறர், நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
கலா-5: 16, 24 பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். 24. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.

கலாத்தியருக்கு எழுதப்பட்ட கடிதத்தின் அமைப்பு:

கலா-1: 1-6ல், சுவிசுஷத்தின் பரிசுத்தத்தைக்குறித்து விவாதித்து, அதைப்புரட்டுபவர்களைக் குறித்து எச்சரிக்கிறார்
கலா 1: 11 முதல் 2: 21 வரையில், சுவிசேஷத்தின் அடிப்படை சத்தியங்களை நிலைப்படுத்துகிறார்
(1: 1 முதல் 2: 21 கிருபையின் உபதேசத்தைத் தற்காத்தல்)
கலா-3 மற்றும் 4 அதிகாரங்களில் கிறிஸ்தவர்களும் நியாப்பிரமாணத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்ற விவாதத்தைத் தாக்குகிறார்.
(3: 1 முதல் 4: 31 கிருபையின் உபதேசத்தை விவரித்தல்)
கலா-5 முதல் 6: 10 வரையில், எப்படி வாழ்ந்திடவேண்டும் என்ற முறையைக் கொடுத்து, கலா-6: 11-18ல் புத்தகத்தை முடிக்கிறார்
(5:1 முதல் 6: 18 கிருபையின் உபதேசத்தை வெளிக்காட்டுதல்)

கலாத்தியருக்கு எழுதப்பட்ட புத்தகத்தின் தொகுப்பு:

I. அதிகாரம் 1: 1-5 வாழ்த்து
1. முகவுரை (1: 1-2)
2. சுவிசேஷத்தின் இரத்தினச்சுருக்கும் (1: 3-5)
கலா-1: 4 அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி, நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.
II. அதிகாரம் 1: 6 முதல் 2: 21 சுவிசேத்தின் பரிசுத்தம்
1. வேறு போதனைகளைப் பின்பற்றவேண்டாம் (1: 6-10)
கலா-1: 8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
2. வேதவசனத்தின்படியான சுவிசேஷம், இயேசு கிறிஸ்துவே கொடுத்ததாகும் (1: 11-24)
3. அந்தியோகியாவிலும் எருசலேமிலும் சுவிசேஷத்தைத் தற்காக்கப் போராடியது (2: 1-21)
அ. எருசலேமிலே (2: 1-10)
ஆ. அந்தியோகியாவிலே (2: 11-21)
பேதுருவின் செய்கை (2: 11-13)
2: 14 இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச் சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்துகொண்டிருக்க, புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக் கட்டாயம்பண்ணலாம்?
பவுலின் மறுமொழி (2: 14-21)
2: 20 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன், ஆயினும், பிழைத்திருக்கிறேன், இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார், நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
III. அதிகாரங்கள் 3-4: நியாயப்பிரமாணத்திலிருந்து விடுதலை
1. அபிஷேகம், அற்புதங்கள், ஆசீர்வாதங்கள் இவை யாவும் விசுவாசத்தின் மூலமாகவே வருகிறது (3: 1-9)
3: 5 அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசவாசுக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்?
அபிஷேத்தைப் பெறுவதும் அற்புதங்கள் நடப்பதும் விசுவாசத்தினால்தான் என்றால், நீதிமானாக்கப்படுதல் மாத்திரம் நியாப்பிரமாணத்தின்படி விருத்தசேதனம் செய்யப்பட்டால்தான் வரும் என்று சொல்லுதல் சரியான போதனை இல்லையே. (ஆவியிலே ஆரம்பம்பண்ணின நீங்கள் மாம்சத்திலே முடிவுபெறலாமா என்று பவுல் கேட்கிறார்).
2. நியாயப்பிரமாணம் ஒருவரையும் நீதிமானாக்கமாட்டாது (3: 10-14)
3. நியாயப்பிரமாணத்திற்கு முன்பே விசுவாசம் நிலைபெற்றிருக்கிறது (3: 15-18 ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது)
4. நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவிடம் வழிநடத்துகிற ஆசிரியரைப்போல இருந்தது (3: 19-24) இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.
5. கிறிஸ்துவிடத்தில் வந்தபிறகு நாம் இனியும் ஆசிரியருக்குக் கீழ்ப்பட்டவர்கள் கிடையாது (3: 25 முதல் 4: 7) 3: 25 விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.
6. மறுபடியும் ஆசிரியடத்திற்கே திரும்பிச்செல்லவேண்டாம் (4: 8-20)
7. ஆகார் மற்றும் சாராளின் உதாரணம் (4: 21-31)
ஆகார்: அடிமைத்தனம் (அடிமைப்பெண்ணின் மகன்)
சாராள்: வாக்குத்தத்தத்தின் பிள்ளைகள் (சுயாதீன மகன்)
IV. அதிகாரங்கள் 5: 1 முதல் 6: 10 ஆவியின்படியான வாழ்வு
1. நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதால் நீதி கிடைக்கும், நீதி பெருகும் என்று எண்ணுதல், போதித்தல் கிருபையை விட்டு விலகுதலாகும் (5: 1-6).
கலா-5: 4 நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிhpந்து கிருபையினின்று விழுந்தீர்கள்.
2. நாம் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம் (5: 7-15)
3. நியாயப்பிரமாணத்திலிருந்து விடுதலையானதை மாம்சத்தைப் பிரியப்படுத்துதலுக்கான உரிமமாகக் கருதவேண்டாம் (5: 13-14. அன்பினால் ஒருவருக்கொருவர் ஊழியம் செய்வோமாக!)
4. ஆவிக்கேற்றபடி நடக்கவேண்டும் (5: 16-25)
மாம்சமும் ஆவியும் விரோதமாகப் போராடுவது (5: 16-18)
மாம்சத்தின் செயல்பாடுகள் (5: 19-21)
ஆவியின் கனி (5: 22-23)
சுயத்திற்கு மரித்து ஆவியின்படி வாழ்தல் (5: 24-25)
5. யாவருக்கும் நன்மை செய்யுங்கள் (5: 26 முதல் 6: 10)
ஒருவர்ஒருவரைக்குறித்து கரிசனைப்படுதல் (5: 26-6: 2)
நம்மையே சோதித்துப் பார்ப்போமாக (6: 3-5)
கொடுத்தல், ஆவிக்கேற்றபடி விதைத்தல் (5: 6-10)
V. அதிகாரம் 6: 11-18 முடிவுரை
1. கிறிஸ்துவின் சிலுவையைக்குறித்தே மேன்மைபாராட்டுவோமாக (6: 11-15). அதன்மூலமாகத்தான் நமக்கு இரட்சிப்பும், தேவநீதியும் சம்பாதிக்கப்பட்டிருக்கிறது.
2. புதுசிருஷ்டியாகுதலின் பிரமாணத்தின்படி நடப்பவர்களுக்கு ஆசீர்வாதம் (6: 16-18)
கலா-6: 15-16 கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை, புதுசிருஷ்டியே காhpயம். 16. இந்தப் பிரமாணத்தின்படி நடந்துவருகிறவர்கள் எவர்களோ, அவர்களுக்கும், தேவனுடைய இஸ்ரவேலருக்கும், சமாதானமும் இரக்கமும் உண்டாயிருப்பதாக.

Comments