தீத்துவுக்கு எழுதப்பட்ட கடிதம்
தீத்துவுக்கு எழுதப்பட்ட கடிதம் குறித்த பார்வை:
I. யார் எழுதியது? எழுதிய ஆசிரியர்
II. யாருக்கு எழுதப்பட்டது? எழுதப்பட்ட நபர்
III. எதற்காக எழுதப்பட்டது? எழுதப்பட்டதன் நோக்கம்
1. எழுதிய ஆசிரியர்: பவுல்
↻தீத்து-1: 1 தேவனுடைய ஊழியக்காரனும், இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல் எழுதுகிறதாவது.
எழுதப்பட்ட நபர்:
∗தீத்து-1: 1 பொதுவான விசுவாசத்தின்படி உத்தம குமாரனாகிய தீத்துவுக்கு.
தீத்து ஒரு கிரேக்க நபராக இருந்து, பவுலால் இரட்சிப்பிற்குள் நடத்தப்பட்ட நபராவார். இவரும் தீமோத்தேயுவைப்போல ஒரு இளைஞனாக ஊழியத்தில் நியமிக்கப்பட்டார். கி.பி.46களில் அந்தியோக்கியாவிலிருந்து எருசலேமிற்குச் சென்றார் (இதைக்குறித்து அப்-15ல் பார்க்கலாம்). தீத்துவை தன் சகோதரன் என்று பவுல் அழைத்தார்.
†கலா-2: 3 ஆனாலும் என்னுடனேகூட இருந்த தீத்து கிரேக்கனாயிருந்தும், விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளும்படிக்குக் கட்டாயம்பண்ணப்படவில்லை.
†2கொரி-2: 13 நான் என் சகோதரனாகிய தீத்துவைக் காணாததினாலே, என் ஆவிக்கு அமைதலில்லாதிருந்தது.
தீத்து, தன்னைப்போலவே ஒத்தஆவியுள்ளவனாக இருந்தான் என்றும், கொரிந்து சபையில் பிரச்சினைகள் எழுந்தபோது, அதை சீர்படுத்துவதற்கு தீத்து தகுதியான நபர் என்றும் பவுல் மதித்து, தனக்கு முன்பாக அவனைக் கொரிந்து சபைக்கு அனுப்பி வைத்ததைக்குறித்தும் நாம் பார்க்கிறோம்.
•2கொரி-8: 17 சுவிசேஷ ஊழியத்தில் எல்லாச் சபைகளிலும் புகழ்ச்சிபெற்ற ஒரு சகோதரனை அவனோடேகூட அனுப்பியிருக்கிறோம்.
•2கொரி-12: 18 தீத்து உங்களிடத்தில் வரும்படி நான் அவனைக் கேட்டுக்கொண்டு, அவனுடனேகூட ஒரு சகோதரனை அனுப்பினேன், தீத்து உங்களிடத்தில் ஏதாவது பொழிவைத் தேடினானா? நாங்கள் ஒரே ஆவியையுடையவர்களாய், ஒரே அடிச்சுவடுகளில் நடந்தோமல்லவா?
எபேசு பட்டணத்து சபைக்கு பவுல் தீமோத்தேயுவை நியமித்ததைப்போல, தீத்துவை கிரேத்தா என்ற தீவில் ஸ்தாபிக்கப்பட்ட சபைக்கு ஊழியனாக நியமித்தார். இந்தத் தீவு மத்தியதரைக்கடல் பகுதியில், பெலிஸ்தர்களுடைய பகுதியாக இருந்தது. "ஸேயு" என்ற கிரேக்கக் கடவுள் இந்தக் கிரேத்தாத் தீவிலிருந்து பிறந்து வந்தது என்று கிரேக்கர்கள் கருதினார்கள். கிரேத்தாத் தீவுமக்கள் பணஆசைக்கும், உண்மையின்மைக்கும் பெயர்போனவர்களாக இருந்தார்கள்.
†தீத்து-1: 5 நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கீரேத்தாதீவிலே விட்டுவந்தேனே.
†தீத்து-1: 12 கிரேத்தாதீவார் ஓயாப்பொய்யா;, துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள் என்று அவா;களிலொருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான்.
எழுதப்பட்டதன் நோக்கம்:
இந்தக் கடிதம் தீத்துவையோ, கிரேத்தாத் தீவின் மக்களையோ முக்கியப்படுத்துகிற வேலையைச் செய்யவில்லை. மாறாக, விசுவாசிகள் நீதியுள்ள வாழ்வு வாழ்ந்திடவேண்டும் என்பதை முக்கியப்படுத்துகிறது. விசுவாசத்தையும், விசுவாசக் கிரியைசெய்தலையும் இந்தப் புத்தகம் வலியுறுத்துகிறது. இரட்சிக்கப்பட்டவர்கள் தெளிந்தபுத்தியுள்ளவர்களாக வாழ்ந்திடவேண்டும் என்றும் இது அறிவுறுத்துகிறது
↻தீத்து-2: 11-12 ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி, 12. நாம் அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் ஜீவனம்பண்ணி,
தீத்துவுக்கு எழுதப்பட்ட கடிதத்தின் தொகுப்பு:
I. அதிகாரம்-1: 1-4 முகவுரை
•தீத்து-1: 3 பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி. (நித்திய ஜீவனைக்குறித்து உலகம் உருவாவற்கு முன்பே தேவன் வாக்குப்ண்ணியிருக்கிறார். ஏற்றகாலத்தில் அதை வெளிப்படுத்தியிருக்கிறார்).
II. அதிகாரம்-1: 5-9 சபைத் தலைவர்களுக்குரிய தகுதிகள்:
†தீத்து-1: 5-9 நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கீரேத்தாதீவிலே விட்டுவந்தேனே.
1. குற்றஞ்சாட்டப்படாதவன்
2. ஒரே மனைவியையுடைய புருஷன்
3. துன்மார்க்கரென்றும், அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவன். (ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவாக இருக்கவேண்டும்).
4. தன் இஷ்டப்படி செய்யாதவன்
5. முற்கோபமில்லாதவன்
6. மதுபானபிரியமில்லாதவன்
7. அடியாதவன்
8. இழிவான ஆதாயத்தை இச்சியாதவன்
9. அந்நியரை உபசரிக்கிறவன்
10. நல்லோர்மேல் பிரியமுள்ளவன்
11. தெளிந்தபுத்தியுள்ளவன்
12. நீதிமான்
13. பரிசுத்தவான்
14. இச்சையடக்கமுள்ளவன்
15. ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம்பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவன்.
III. அதிகாரம் 1: 10-16 விசுவாசியாதவர்களின் குணாதிசயங்கள்:
தீத்து-1: 10-16 (அநேகர், விசேஷமாய் விருத்தசேதனமுள்ளவர்கள், இரட்சிக்கப்பட்டும் அதற்கேற்ப வாழாதவர்கள்)
1. அடங்காதவர்கள்
2. வீண்பேச்சுக்காரர்
3. மனதை மயக்குகிறவர்கள் (அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்)
4. அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
5. (கிரேத்தாதீவார்) ஓயாப்பொய்யர்,
6. துஷ்டமிருகங்கள்,
7. பெருவயிற்றுச் சோம்பேறிகள்
8. தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்னுகிறார்கள்,
9. கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்.
10. அருவருக்கப்படத்தக்கவர்கள்
11. கீழ்ப்படியாதவர்கள்
12. எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்கள்.
IV. அதிகாரம்-2: 1-10 சபைக்குரிய ஆலோசனைகள்:
1. முதிர்வயதுள்ள ஆண்களுக்கு (2: 2)
∗தீத்து-2: 2 முதிர்வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்கவேண்டும்.
2. முதிர்வயதுள்ள பெண்களுக்கு (2: 3-4)
∗தீத்து-2: 3 முதிர்வயதுள்ள ஸ்திரிகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமா யிருக்கவும், 5. அவர்களுக்குப் (வாலிபப் பிள்ளைகளுக்கு) படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் இருக்கவேண்டும்.
3. வாலிபப்பெண்களுக்கு (2: 4-5)
∗தீத்து-2: 4-5 தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்குப் பாலியஸ்திரிகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், 5. தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்படிகிறவர்களுமாயிருக்க வேண்டும்.
4. வாலிபப் பையன்களுக்கு (2: 6-8)
∗தீத்து-2: 6 பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவேண்டும்.
5. வேலைக்காரர்களுக்கு (2: 9-10)
∗தீத்து-2: 10 வேலைக்காரர், தங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ளவும், திருடாமலிருந்து, சகலவிதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கவும் வேண்டும்.
V. அதிகாரம்-2: 11 முதல் 3: 11 வரை: தீத்துவுக்கு தனிப்பட்ட ஆலோசனைகள்
1. தேவகிருபையைக்குறித்தும், அதன்நோக்கத்தைக்குறித்தும் பேசுவாயாக (2: 11-15)
•தீத்து-2: 11-13 ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி, 12. நாம் அவபக்தியையும் லௌகிகஇச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவா;களாய் ஜீவனம்பண்ணி, 13. நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகாதேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.
2. விசுவாசிகளுக்கு நினைப்பபூட்ட வேண்டியவைகள் (3: 1-8)
அ. துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருந்திட
ஆ. சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருந்திட
இ. ஒருவனையும் தூஷியாமலிருந்திட
ஈ. சண்டைபண்னாமலிருந்திட
உ. முற்காலத்தில் நாம் எப்படிப்பட்டவர்களாக இருந்தோம் என்பதை மறக்காமலிருந்திட (3: 3)
ஊ. பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பித்திட
எ. நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருந்திட
3. தவிர்க்கப்பட வேண்டிவைகள் (3: 9-11)
அ. புத்தியீனமான தர்க்கங்களை
ஆ. வம்சவரலாறுகளை
இ. சண்டைகளை
ஈ. நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களை விட்டுவிலகு,
உ. வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு, அவனை விட்டுவிலகு
V. அதிகாரம்-3: 12-15 முடிவு வார்த்தைகள்
↻தீத்து-3: 15 கிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
Very nice
ReplyDelete