யோவான் சுவிசேஷம்


யோவான் சுவிசேஷம் குறித்த பார்வை:

I. எழுதிய ஆசிரியர்
II. எழுதப்பட்ட மக்கள்
III. இயேசுவைக் குறித்த பார்வை
IV. எழுதப்பட்டுள்ள செய்தி

1. எழுதிய ஆசிரியர்: யோவான்

இயேசுவுக்கு மிகவும் நெருக்கமான சீடராக, அன்பின் சீடனாக இருந்தவர் யோவான். இயேசுவால் நேசிக்கப்பட்டர் என்று இவரைக்குறித்து அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு நம்மையும் அதிகமாக நேசிக்கிறர். இந்த சுவிசேஷத்தில் எழுதப்பட்டிருக்கும் சம்பவங்களுக்கு யோவானே கண்ணாரக்கண்ட சாட்சியாக இருக்கிறார். யாரோ சொன்னவைகளை அல்ல, மாறாகத் தானே கண்டவைகளை எழுதியிருக்கிறார். இயேசுவால் யோவான் அழைக்கப்பட்டபோது மீன்பிடிப்பவராக இருந்தவராவர். அருமையான இருதயத்தையுடைய ஒரு எளிமையான மனிதர் யோவான். யோவான் எபேசு பட்டணத்தில் இருந்தபோது இந்து சுவிசேஷத்தை எழுதியிருக்க வேண்டும்.

2. எழுதப்பட்ட மக்கள்:

யாருக்கு எழுதப்பட்டது என்பது குறிப்பாகச் சொல்லப்படவில்லை. மிகவும் எளியநடையில் யாவரும் புரிந்து கொள்ளப் படத்தக்க விதத்தில் இது எழுதப்பட்டிருக்கிறது. மத்தேயு, மாற்கு, லூக்கா சுவிசேஷங்கள் எழுதப்பட்ட பிறகே இது எழுதப்பட்டிருக் கவேண்டும். அதாவது கி.பி.68-69ல் அல்லது கி.பி.90ல் இது எழுதப்பட்டிருக்கலாம்.

3. இயேசுவைக்குறித்த பார்வை: மாம்சத்தில் வந்த தேவன் இயேசு

யோவா-1: 1, 14 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 14. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்.

4. எழுதப்பட்டுள்ள செய்தி

யூதேயாவின் பகுதிகளில் (கலிலேயா) இயேசுவின் ஊழியங்களை யோவான் முக்கியப் படுத்தியிருக்கிறார். 4 சுவிசேஷங்களில் யோவான் சுவிசேஷம் ஒரு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது.

யோவான் சுவிசேஷத்தில் காணப்படாதவைகள்:

ஒரு உவமைகூட கொடுக்கப்படவில்லை.
அசுத்தஆவிகளைத் துரத்தின ஊழியம் குறிப்பிடப்படவில்லை
குஷ்டரோகி சுகமாக்கப் பட்டதைக் குறித்து எழுதப்படவில்லை
12 அப்போஸ்தலர்களின் பெயர் பட்டியல் கொடுக்கப் படவில்லை
திருவிருந்து ஸ்தாபிக்கப்பட்டதைக் குறித்து கொடுக்கப் படவில்லை.
கடைசிக் காலத்தைக் குறித்த உரையாடல் இதிலே கொடுக்கப் படவில்லை.
இயேசுவின் பிறப்பைக்குறித்தோ, அவர் பிசாசினால் சோதிக்கப் பட்டதைக் குறித்தோ, சீடர்களுக்கு முன்பாக அவர் மறுரூபமானதைக் குறித்தோ இதில் எழுதப்படவில்லை.

யோவான் சுவிசேஷத்தில் மாத்திரம் காணப்படுபவைகள்:

கானாஊர் கல்யாணத்தில் இயேசு செய்த முதல் அற்புதம்
இயேசு தேவாலயத்தை முதல்முறை சுத்திகரித்த சம்பவம்
நிக்கோதேமுவோடு இயேசுவின் உரையாடல்
சமாரிய ஸ்திரீயுடன் இயேசுவின் உரையாடல்
பெதஸ்தா குளத்தினருகில் 38 வருடமாய் வியாதியாய் இருந்தவனை இயேசு குணமாக்குதல்
விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணிற்குக் கொடுக்கப்பட்ட தீர்ப்பு
லாசரு உயிரோடு எழுப்பப்பட்டது
கடைசி இராபோஜனத்தின் போது இயேசுவின் உரையாடல்
இயேசு கைது செய்யப்பட்ட போது அவருடைய வல்லமை வெளிப்பட்ட செயல்
உயிர்த்தெழுந்த பிறகு இயேசு பேதுருவைச் சந்தித்து ஊழியப்ப ொறுப்பைக் கொடுத்தது

மற்ற சுவிசேஷங்களில் இருந்து யோவானிலும் குறிப்பிடப் பட்டிருப்பவைகள்:

யோவான் ஸ்நானகனின் ஊழியமும், இயேசுவைக்குறித்த அவருடைய சாட்சியும் (1: 19-34)
5000 பேருக்கு அப்பத்தைக் கொடுத்து போஷித்த அற்புதம் (6: 1-13)
தண்ணீரின்மேல் நடந்தது (6: 16-21)
எருசலேமிற்குள் இயேசு பவணியாக அழைத்துச் செல்லப்பட்டது (12: 12-19)
இராபோஜனம் (13: 21-38)
கைதுசெய்யப்பட்டது, மரணம், உயிர்த்தெழுதல் (18: 1 முதல் 20: 25)

யோவான் சுவிசேஷத்தின் சிறப்பு:

அதிகாரம் 1: 43 முதல் 5: 47 கிறிஸ்துவினுடைய துவக்க ஊழியத்தின் விபரங்களை உள்ளடக்கி இருக்கிறது.
அதிகாரம் 6 கிறிஸ்துவினுடைய மையஊழியத்தின் விபரங்களை உள்ளடக்கி இருக்கிறது.
அதிகாரம் 7 முதல் 21: 25 கிறிஸ்துவினுடைய இறுதி ஊழியத்தின் விபரங்களை உள்ளடக்கி இருக்கிறது.
இந்த சுவிசேஷம் எழுதப்பட்டதற்கான நோக்கத்தை யோவான்-20: 31ல் யோவான் குறிப்பிட்டிருக்கிறார்
யோவா-20: 31 இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும் படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.
இது விசுவாசித்தலின் புத்தகமாக இருக்கிறது. இந்த சுவிசேஷத்திலே விசுவாசத்தைக்குறித்த வார்த்தை 100 முறை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. "உலகம்" என்ற வார;த்தை 78 முறை வந்திருக்கிறது.
யோவான்-3: 16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
இந்த சுவிசேஷத்தில் தேவனுடைய தகப்பனின் தன்மையும் அதிகமாக முக்கியப் படுத்தப் பட்டிருக்கிறது. பிதா என்ற வார்த்தை 106 முறை வந்திருக்கிறது.
யோவா-14: 9,11 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்: அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? 11. நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்.
யோவா-14: 16 நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்தியஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
யோவா-16: 13 சத்தியஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார், அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

யோவான் சுவிசேஷத்தின் தொகுப்பு:

I. அதிகாரம் 1: 1-18 முகவுரை
1. இயேசுவின் தெய்வீகம் (1: 1-5)- தேவன்
2. இயேசுவின் நோக்கம் (1: 6-13) பிரகாசிப்பிக்கும் ஒளி
3. இயேசுவின் பிரசன்னம் (1: 14-18)- கண்களால் கண்டோம்
II. அதிகாரங்கள் 1: 19 முதல் 4: விசுவாசம் நிலைப்படுத்தப்படுதல்
1. யோவான் ஸ்நானகனின் சாட்சி (1: 19-34- இவர் தேவகுமாரன்)
2. சீடர்களின் சாட்சி (1: 35-52- நாங்கள் மேசியாவைக் கண்டோம், நீர் தேவனுடைய குமாரன்)
3. முதல் அற்புதம் (2: 1-12 தண்ணீர் இரசமாக்கப்பட்டது- சீடர்கள் அவரை விசுவாசித்தார்கள்)
4. தேவாலயத்தைச் சுத்திகரித்தல் (2: 13-15 தன் அதிகாரத்தை இயேசு வெளிப்படுத்துகிறார்)
5. நிக்கொதேமு (3: 1-21 தன் ஞானத்தை இயேசு வெளிப்படுத்துதல், போதகருக்கே போதித்தல்)
6. யோவான் ஸ்நானகனின் 2ஆவது சாட்சி (3: 22-36 தேவனால் அனுப்பப்பட்ட மணவாளன்)
7. சமாரியப் பெண் (4: 1-42 தனது வெளிப்பாட்டு அறிவை வெளிப்படுத்துதல்-கிறிஸ்து உலகத்தின் இரட்சகர் என்ற சாட்சி)
8. ராஜாவின் மனுஷனுடைய குமாரனைக் குணமாக்குதல் (4: 43-54 வியாதியின்மீது அதிகாரம்)
III. அதிகாரங்கள் 5 முதல் 10 விசுவாசம் வாதிடப்படுதல்
1. 38 வருட வியாதியஸ்தனை ஓய்வுநாளில் சுகமாக்கியது (5: 1-47)
தன்னைப் பிதாவோடு ஒன்றாக இணைத்துக் காண்பித்தது (5: 31-47)
அ. யோவான் ஸ்நானகனின் சாட்சி (5: 31-35)
ஆ. அவருடைய கிரியைகளின் சாட்சி (5: 36)
இ. பரலோகப்பிதாவின் சாட்சி (5: 37-38)
ஈ. வேதவசனங்களின் சாட்சி (5: 39-47)
2. தான் வானத்திலிருந்து இறங்கிவந்த அப்பம் என்று சொன்னபோது (6: 1-71) சீடர்களும் பிரிந்து சென்றார்கள். 6: 67-68 அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாய் இருக்கிறீர்களோ என்றார். சீமோன்பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.
3. தங்களில் ஒருவராக இயேசு தன்னை இணைத்துக் காட்டியபோது (7: 1-52)
4. நாங்கள் ஆபிரகாமின் சந்ததி என்று யூதர்கள் சுயநீதியில் நின்றபோது (8: 1-59)
5. தங்கள் சுயஅறியாமையால் செயல்பட்டபோது (9: 1-41 குருடனின் கண்களை அவர் திறந்தும்)
6. அவருடைய உரிமை பாராட்டுதல்களால்- நானே நல்ல மேய்ப்பன் (10: 1-40)
IV. அதிகாரங்கள் 11-12: விசுவாசம் உறுதிப்படுத்தப்படுதல்
1. மரணத்தின்மீது வல்லமை (11: 1-45)
2. பிரதான ஆசாரியனின் தீர்க்கதரிசனம் (11: 46-57)
யோவா-11: 49-50 அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந்தெரியாது. 50. ஜனங்களெல்லாரும் கெட்டுப் போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்கும் என்று நீங்கள் சிந்தியாமல் இருக்கிறார்கள் என்றான்.
3. மரணத்திற்காக பரிமளத்தைலத்தாள் அடையாளப் படுத்தப்படுதல் (12: 1-8)
4. இயேசுவின் வெற்றிப்பவணி (12: 9-19)
5. தன் மரணத்தைக்குறித்த இயேசுவின் முன்னறிவித்தல் (12: 20-50)
V. அதிகாரங்கள் 13 முதல் 17 விசுவாசம் வாழ்க்கையில்:
1. பணிவிடை செய்தலாலும், அன்பகூருதலாலும் (13: 1-38)
2. நம்பிக்கையாலும், திரியேக தேவனுடைய வாசம்பண்ணுதலாலும் (14)
3. நிலைத்திருத்தலாலும், அறிதலாலும் (15 முதல் 16: 4)
4. பரிசுத்த ஆவியானவராலும் சந்தோஷத்தாலும் (16: 5-33)
5. ஜெபத்தாலும் ஒருமனத்தாலும் (17)
VI. அதிகாரங்கள் 18-19: விசுவாசத்தின் போராட்டங்கள்
1. காட்டிக் கொடுக்கப்படுதல் (18: 1-11)
2. மறுதலித்தல் (18: 12-27)
3. விசாரனை (18: 28 முதல் 19: 16) அதிகாரம்:
யோவா-19: 11 இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப் படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது, ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக் கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.
4. சிலுவையில் அறையப்படுதல் (19: 17-37 முடிந்தது)
5. அடக்கம் (19: 38-42)
VII. அதிகாரங்கள் 20-21: விசுவாசத்தின் ஜெயம்
1. அவர் கல்லறையிலே இல்லை என்று கண்ணால் பார்த்த சாட்சி (20: 1-10)
2. அவரே தோன்றிய சாட்சி (20: 11-29)
அ. மகதெலேனா மரியாளுக்கு (20: 11-18)
ஆ. சீடர்களுக்கு (20: 19-23)
இ. தோமாவுக்கு (20: 24-39)
3. வேறு அற்புதங்கள் மூலம் சாட்சி (20: 30-31)
4. ஆகாரம் கொடுத்தலின்மூலம் சாட்சி (21: 1-14)
5. என் ஆடுகளை மேய்ப்பாக, என்னைப் பின்பற்றி வா என்ற அழைப்பின் சாட்சி (21: 15-25)

முக்கிய வசனம்:

யோவா-3: 16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவா-5: 24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டுநீங்கி, ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இயேசுவின் அற்புதங்கள்





இயேசுவின் உவமைகள்





Comments

  1. Able to know the spiritual truth through chapter john

    ReplyDelete

Post a Comment