நியாயாதிபதிகள்
நியாயாதிபதிகளுக்கான காரணம்:
யோசு-24: 31 யோசுவா உயிரோடிருந்த சகல நாட்களிலும், கர்த்தர் இஸ்ரவேலுக்குச் செய்த அவருடைய கிரியைகள் யாவையும் அறிந்து யோசுவாவுக்குப்பின்பு வெகுநாள் உயிரோடிருந்த மூப்பருடைய சகல நாட்களிலும், இஸ்ரவேலர் கர்த்தரைச் சேவித்தார்கள்.
நியா-1: 28 இஸ்ரவேலர் பலத்தபோது, கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல் பகுதி கட்டப்பண்ணினார்கள்.
சத்துருக்களைத் துரத்துவேண்டிய செயலில் அவர்கள் சோம்பேறிகளானார்கள். முற்றிலும் முறியடிக்கப்படாமல் விடப்படுகிற சத்துருவின் ஆவிகளால் எப்போதுமே நமக்கு இடறல்கள் உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இதினிமித்தமாகத்தான், விடுதலை ஊழியத்தில் முழுமையாக விடுதலையடைதலின் அவசியத்தை தேவன் நமக்குத் தெளிவுபடுத்தி, வலியுறுத்துகிறார். எதிரிகள் தானாக வெளியேறிச் செல்லமாட்டார்கள். நாம்தான் அவர்களையும், அவர்களக்குப் முன்னாகச் செயல்படும் ஆவிகளையும் துரத்திடவேண்டும்.
மாற்கு-16: 17 விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். விடுதலை ஊழியத்தை அலட்சியப் படுத்தாதீர்கள், விடுதலைக்கான தருணங்களைத் தட்டிக்கழிக்காதீர்கள்!
இந்தப் புத்தகம் தோல்வியையும், சோகத்தையும் உள்ளடக்கிய புத்தகமாகும். ஆசீர்வாதமான மக்கள் பலவித தோல்வியின் சோகத்திற்குள் சென்ற சம்பவங்களை இது வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அதே நேரத்தில், நிலைத்திருக்குகிற தேவனுடைய மாபெரும் இரக்கத்தையும் இது படமிட்டுக் காட்டுகிறது. கானானுக்குள் பிரவேசித்ததிலிருந்து ராஜாக்களிள் நாட்கள் வரையிலான காலத்தையும் இந்தப் புத்தகம் விவரிக்கிறது.
•ஆதியாகமம்: ஏதேனிலிருந்து கானான், பிறகு கானானிலிருந்து எகிப்து வரை
•யாத்திராகமம்: எகிப்திலிருந்து வானாந்திரம் வரை
•லேவியராகமம்: வனாந்திரத்தில் தேவனுக்கு ஆராதனைசெய்தல்
•எண்ணாகமம்: வனாந்திரத்தில்.
•உபாகமம்: வனாந்திரத்திலிருந்து யோர்தானுக்கு அருகாமை வரை
•யோசுவா: யோர்தானிலிருந்து கானானுக்குள்
•நியாயதிபதிகள்: கானானில் (நியாயதிபதிகள் முதல் ராஜாக்கள் வரை) அதற்குப் பிறகு, ராஜாக்களின் முடிவில் கானானிலிருந்து அசீரியாவுக்கும்; பாபிலோனுக்கும் செல்வதைக் குறித்துப் பார்ப்போம். அதைக்குறித்து பிறகு பார்க்கலாம்.
இந்தப் புத்தகம் முழுவதிலும் ஒரு சுழற்சிமுறை இருப்பதை நாம் பார்க்கமுடியும். பாவத்திலிருந்து அமைதி வரையிலான சுழற்சி என்று நாம் சொல்லாம்.
ஒரு உதாரணம்:
•நியா-3: 7 இப்படி இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப் பானதைச் செய்து, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்து, பாகால்களையும் தோப்பு விக்கிரகங்களையும் சேவிக்கிறபோது,
•நியா-3: 8 கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டவராகி, அவர்களை மெசொப் பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப்போட்டார். இப்படியே இஸ்ரவேல் புத்திரர் கூசான்ரிஷதாயீமை எட்டு வருஷம் சேவித்தார்கள்.
•நியா-3: 9 இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும்படி காலேபின் தம்பியான கேனாசுடைய குமாரனாகிய ஒத்னியேல் என்னும் ஒரு ரட்சகனை அவர்களுக்கு எழும்பப்பண்ணினார்.
•நியா-3: 10 அவன்மேல் கர்த்தருடைய ஆவி வந்திருந்ததினால், அவன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, யுத்தம்பண்ணப் புறப்பட்டான். கர்த்தர் மெசொப் பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார், ஆகையால் அவன் கை கூசான்ரிஷதாயீமின் மேல் பலங்கொண்டது.
•நியா-3: 11 தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது. கேனாசின் குமாரனாகிய ஒத்னியேல் மரணமடைந்தான்.
நியாயாதிபதிகளின் காலத்தில் 6 வகைப்பட்ட கூட்டம் இஸ்ரவேலரை ஒடுக்கினதைக்குறித்துப் பார்க்கிறோம். மெசபதோமியர்கள், மோவாபியர்கள், பெலிஸ்தியர்கள், கானானிர்கள், மீதியானியர்கள் மற்றும் அம்மோனியர்கள். 6 என்பது மனிதனைக் குறிக்கிற எண். மாம்சம் நம்மை ஒடுக்கி அடிமைப்படுத்துவதாக இருக்கிறது. அதை மேற்கொள்வதற்கு நாம் ஆவியிலே பெலன்கொண்டு தேவனைச்சார்ந்து வாழ்ந்திடக் கற்றுக்கொள்ளவேண்டும். நியாயாதிபதிகளின் புத்தகத்தில் மொத்தம் 12 நியாயாதிபதிகள் வருகிறார்கள் (அதிகாரம் 9: 22ன் அபிமெலேக்கையும் சேர்த்தால் மொத்தம் 13 பேராவார்கள். அபிமெலேக்கு இஸ்ரவேலை மூன்று வருஷம் அரசாண்டான். நியா-10: 1 அபிமெலேக்குக்குப்பின்பு, தோதோவின் மகனாகிய பூவாவின் குமாரன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை இரட்சிக்க எழும்பினான்). அபிமெலேக்கு குறுக்குவழியில் தன்னையே தலைவனாக்கிக் கொண்டான். அப்படிப்பட்ட தலைமைத்துவம் நிலைப்பதில்லை, தேவனால் அங்கீகரிக்கப் படுவதுமில்லை. நியாயாதிபதிகளின் காலம் கி.மு.1365 முதல் 1085 வரை ஆகும். எனவே இந்தப் புத்தகம் சுமார் 380 வருட காலத்தை உள்ளடக்கியிருக்கிறது.
தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துவதுதான் இஸ்ரவேலரைக்குறித்த தேவனுடைய நோக்கமாகும். சபையையும் இதற்காகவே தேவன் ஏற்படுத்தியிருக்கிறார். புறஜாதிகள் மத்தியில் நாம் தேவனுக்குச் சாட்சியாக இருக்கவேண்டும். ஆனால் பலவிதங்களில் அவர்கள் தவறினார்கள். இன்றைக்கும் சபையாக, நாம் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் மத்தியில் எப்படியிருக்கிறோம்?
நியாயாதிபதிகளின் தொகுப்பு: (இதை 2 பகுதிகளாகப் பிரிக்கலாம்)
I. அதிகாரங்கள் 1 முதல் 16 மக்களின் சுழற்சி
நியா-2: 1 கர்த்தருடைய தூதனானவர் கில்காலிலிருந்து போகீமுக்கு வந்து.
“கர்த்தருடைய தூதன்” என்று பழைய ஏற்பாட்டில் ஒருமையில் வருகிற வார்த்தை பெரும்பாலும் இயேசுவைப் பிரதிபலிக்கிறது. புதிய ஏற்பாட்டில் மரியாள் மூலமாக மனிதனாகப் பிறந்துவந்தார். அவர் தேவனாக இருக்கிறபடியால், மனிதனாக வருவதற்கு முன்பு, தூதனின் சாயலில் தம்மை வெளிப் படுத்தியிருக்கிறார் என்று வேதம் சொல்கிறது. யாத்-3: 2,4 அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினி ஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி. (ஆதி-16: 7, எண்-22: 22, நியா-6: 11, 13: 3)
தேவன் சத்துருக்களை விட்டு வைத்திருப்பதற்கான காரணம்:
நியா-3: 1-2 கானான் தேசத்தில் நடந்த சகல யுத்தங்களையும் அறியாதிருந்த இஸ்ரவேலராகிய அனைவரையும் சோதிப்பதற்காகவும், 2. இஸ்ரவேல் புத்திரரின் சந்ததியாரும் அதற்குமுன் யுத்தஞ்செய்ய அறியாதிருந்தவர்களும் அவைகளை அறியும்படி பழக்குவிப்பதற்காகவும், கர்த்தர் விட்டுவைத்த ஜாதிகள். (சோதிப்பதற்கான காரணத்தைக் குறித்து உபாகம்-13: 1-3ல் நாம் பார்த்தோம்). பொல்லாத ஆவிகள் இன்னும் விட்டு வைக்கப்பட்டிருப்பது சோதிப்பதற்கான தேவனுடைய செயல் என்று வேதம் சொல்கிறது. நாம் யுத்தவீரர்களாக அழைக்கப் பட்டிருக்கிறோம். எதிரிகள் இல்லையென்றால் யுத்தம் இல்லை. யுத்தத்தில் பழகவில்லை என்றால் எதிரிகளோடு யுத்தம்செய்து ஜெயமெடுக்கமுடியாது. மேலும், இயேசு சொல்லியிருக்கும் வெற்றிப்பரிசுகளை ஜெயமெடுக்கும்போதுதான் நாம் பெறமுடியும்.
•வெளி-2: 7 ஜெயங் கொள்ளுகிறவன் எவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன்.
•2: 11 ஜெயங் கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை.
•2: 17 ஜெயங் கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக் கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன்.
•2: 26 ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவன் எவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
•3: 5 ஜெயங் கொள்ளுகிறவன் எவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும், ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.
•3: 12 ஜெயங் கொள்ளுகிறவன் எவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை, என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத் திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.
•3: 21 நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங் கொள்ளுகிறவவன் எவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.
(வெளி-12: 11 மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்).
1. 1 முதல் 3: 6 பிண்ணனி
2. 3: 7-11 ஏகூத்
3. 3: 12-31 ஏகூத்தும் சம்காரும்
4. 4 முதல் 5 தெபோராளும் பாராக்கும்
5. 6 முதல் 10: 5 கிதியோன், தோலா, யாவீர்
6. 10: 6 முதல் 12 யெப்தா, ஏலோன், இப்சான், அப்தோன்
7. 13 முதல் 16 சிம்ஸோன்
II. அதிகாரங்கள் 17 முதல் 21: தேவமக்கள் பாவங்களின் விழுதலின் மாதிரிகள்:
1. 17 முதல் 18 தாண் கேத்திரத்தாரும், மீகாவின் வீட்டில் பணத்துக்காக விக்கிரகங்களை ஆராதித்த லேவியன்.
2. 19 முதல் 21 பென்யமீன் கோத்திரத்தார் பாலியல் முறைகேட்டுக்குள் சென்றது. (லேவியன
நியாயாதிபதிகளின் முக்கிய வசனம்: (நியா-17: 6, 21: 25) அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை. அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிபோனபடி செய்துவந்தான்.

Nice useful
ReplyDelete