கொலோசேயருக்கு எழுதப்பட்ட கடிதம்
கொலோசேயருக்கு எழுதப்பட்ட கடிதம் குறித்த பார்வை:
I. யார் எழுதியது? எழுதிய ஆசிரியர்
II. யாருக்கு எழுதப்பட்டது? எழுதப்பட்ட மக்கள்
III. எதற்காக எழுதப்பட்டது? எழுதப்பட்டதன் நோக்கம்
எழுதிய ஆசிரியர்: பவுல்
கொலோ-1: 1 தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும் எழுதுகிறதாவது.
ஊழியம்செய்வதில் தன்னோடு கூடஇருந்த தீமோத்தேயுவை சகோதரன் என்று பவுல் அழைக்கிறார். இரட்சிப்பிற்குள் நடத்தி, தன்னுடைய ஆவிக்குரிய மகனாகப்பார்த்த தீமோத்தேயுவை, ஊழியக்காரனாக உருவாக்கியபோது தன் சகோதரனாகவும் பார்த்தார்.
•ரோம-16: 21 என் உடன்வேலையாள் என்று குறிப்பிடுகிறார்
•1கொரி-4: 17 என் குமாரனாகிய தீமோத்தேயு என்று குறிப்பிடுகிறார் (1தீமோ-1: 18)
•1தீமோ-1: 2 விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயு என்று குறிப்பிடுகிறார்
•2தீமோ-1: 2 பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயு என்று குறிப்பிடுகிறார்
•2கொரி-1: 1 சகோதரனாகிய தீமோத்தேயு என்று குறிப்பிடுகிறார் (பிலே-1: 1, எபி-13: 23)
•பிலி-1: 1 ஊழியக்காரனாகிய தீமோத்தேயு என்று குறிப்பிடுகிறார்
•1தெச-3: 2 தேவஊழியக்காரனாகிய தீமோத்தேயு என்று குறிப்பிடுகிறார்.
எழுதப்பட்ட மக்கள்:
கொலோ-1: 1 கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களும், விசுவாசிகளுமாயிருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது. (பரிசுத்தவான்களும், உண்மையுள்ளுவர்களமாயிருக்கிற சகோதரர்கள்).
கொலோசே பட்டணம் ஆசியாவில் ரோமஆளுகைக்குட்பட்டிருந்த, நவீன துருக்கியின் ஒரு பகுதியாகும். எபேசுவுக்கு கிழக்கே 100 மைல்களுக்கு அப்பால் இருந்தது. லாவோதிக்கேயா, எராப்போலியா மற்றும் கொலோசே இந்த 3ம் முப்பட்டணங்களாக இணைக்கப்பட்டிருந்தன (கொலோ-4: 13). கொலோசேப் பட்டணத்தில் காணப்பட்ட வேதபுரட்டுகளால் எப்பாப்பிரா மிகவும் வேதனைப்பட்டு, ரோமாபுரியில் சிறையிலிருந்த பவுலைச் சந்திப்பதற்காக நீண்ட பயணத்தை மேற்கொண்டார்.
கொலோ-4: 12-13 எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான், உங்களைச் சோ;ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான். 13. இவன் உங்களுக்காகவும், லாவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாயிருக்கிறானென்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன்.
எழுதப்பட்டதன் நோக்கம்:
கொலோசேய பட்டணத்தில் எழும்பியிருந்த வேதபுரட்டு, அங்கே சபையை அழிப்பதற்கேதுவாகப் பரவியதால், அதைத் தோற்கடிப்பதற்காக பவுல் இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார். குறிப்பாக கிறிஸ்துவைக்குறித்த பழுதடைந்த பார்வையை (அதாவது அவர் உண்மையிலே மனிதனாக வந்தது, முழுமையாக தேவனாகவும் இருப்பதைக்குறித்த பார்வை) சரிபடுத்துவதற்காகவும், யூதமார்க்கத்தாரின் பாரம்பரிய விருத்தசேதன முறையை விவாதிப்பதற்காகவும் இது எழுதப்பட்டிருக்கிறது. இந்தக் கடிதத்தை லவோதிக்கேயாவிலிருந்த சபையாரும் வாசிக்கும்படி பவுல் கேட்டுக்கொண்டார் (கொலோ-4: 16 இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்டபின்பு இது லாவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள், லாவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள்).
கொலோ-2: 8-11 லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல. 9. ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது. 10. மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள். 11. அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள்.
கொலோ-3: 10-11 தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தாpத்துக்கொண்டிருக்கிறீர்களே. 11. அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவ னென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.
கொலோசேயருக்கு எழுதப்பட்ட கடிதம் இயேசு கிறிஸ்துவின் மேன்மையை முக்கியப்படுத்தி, அவரே முதன்மைக்குரியவராக இருக்கிறார் என்பதை அறிவிக்கிறது. எபேசியருக்கு எழுதப்பட்ட கடிதம், கிறிஸ்துவின் சபையைக்குறித்து (சரீரம்) முக்கியப்படுத்துகிறது. கொலோசேயருக்கு எழுதப்பட்ட கடிதமோ சபையின் கிறிஸ்துவைக்குறித்து (தலை) முக்கியப்படுத்துகிறது. எல்லாவற்றிலும், எல்லாவற்றிற்கும் கிறிஸ்துவே முக்கியமானவராக இருக்கிறார் என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது. நம்முடைய வாழ்வில்; கிறிஸ்துவே முதன்மையனாவராகவும், முக்கியமானவராகவும், மையமானவராகவும் இருப்பாராக! கிறிஸ்து தேவனாக இருக்கிறார் என்பதை பவுல் மிகவும் ஆணித்தரமாக உறுதிப்படுத்துகிறார்.
†அவருக்குள் பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது (1: 14)
†அவர் அதரிசமான தேவனுடைய தற்சுரூபமாயிருக்கிறார் (1: 15)
†அவர் சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறானவர் (1: 15)
†சகலமும் அவராலே, அவரைக்கொண்டு, அவருக்கென்று சிருஷ்டிக்கப்பட்டது (1: 16)
†அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர்(1: 17)
†அவருக்குள் எல்லாம் நிலைநிற்கிறது (1: 17)
†அவரே சபையாகிய சாPரத்திற்குத் தலையானவர் (1: 18)
†அவரே எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர் (1: 18)
†அவருக்குள்ளே சகல பரிபூரணமும் வாசமாயிருக்கிறது (1: 19)
†கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருக்கிறார் (1: 27)
†அவருக்குள் ஞானம், அறிவு என்ற பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது (2: 3)
†அவருக்குள் தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக வாசமாயிருக்கிறது (2: 9)
†அவர் சகல துரைத்தனங்களுக்கும், அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிறார் (2: 10)
†அவருக்குள் கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை நாம் பெற்றோம் (2: 11)
†ஞானஸ்நானத்தில் அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டோம் (2: 12)
†விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறோம் (2: 12)
†அவரோடேகூட உயிh;ப்பிக்கப்பட்டிருக்கிறோம் (2: 13)
†நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்தார் (2: 14). (நாம் பாவிகளாக இருக்கிறோம் என்ற நியாயப்பிரமாணத்தின் தீர்ப்பை)
†துரைத்தனங்களையும், அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்(2: 15)
†கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் (3: 1)
†கிறிஸ்து நம்முடைய ஜீவனாக இருக்கிறார் (3: 4)
†கிறிஸ்து எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார் (3: 11)
†கிறிஸ்துவே, சுதந்தரமாகிய பலனைக் நமக்குக் கொடுப்பார் (3: 24)
கொலோசேயருக்கு எழுதப்பட்ட கடிதத்தின் தொகுப்பு:
இது இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்படுகிறது.
அ. அதிகாரம் 1: 1 முதல் 2: 5 கிறிஸ்துவும், அவருடைய செய்கையும்
ஆ. அதிகாரம் 2: 6 முதல் 4: 18 வாழ்க்கைக்குரிய ஆலோசனைகள்
I. அதிகாரம்-1: 1 முதல் 2: 5 வரை
1. முகவுரை (1: 1-2)
2. கொலோசேய சபையாருக்கு பவுலின் நன்றிகள் (1: 3-8)
3. பவுலின் ஜெபம் (1: 9-14)
கொலோ-1: 9-11 நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், 10. சகலவித நற்கிhpயைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், 11. சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்.
4. கிறிஸ்துவின் தெய்வீகம் (1: 15-23)
↻அவர் அதரிசமான தேவனுடைய தற்சுரூபமாயிருக்கிறார் (1: 15)
↻அவர் சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறானவர் (1: 15)
↻சகலமும் அவராலே சிருஷ்டிக்கப்பட்டது (1: 16)
↻அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர் (1: 17)
↻எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது (1: 17)
↻அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர் (1: 18)
↻ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவார் (1: 18)
↻சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கிறது (1: 19)
↻யாவற்றையும், யாவரையும் தேவனோடு ஒப்புரவாக்குபவர் (1: 20)
5. சபையாரைக்குறித்து பவுலின் மகிழ்ச்சி (1: 24-29)
கொலோ-1: 27 புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார், கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
6. இரண்டு சபைகளுக்கு (2: 1-5) கொலோசே பட்டணத்து சபை, லவோதிக்கேயா பட்டணத்து சபை.
II. அதிகாரம் 2: 6 முதல் 4: 6 வரை: கொலோசே சபையாருக்கு பவுலின் ஆலோசனைகள்:
1. விசுவாசத்தில் உறுதிப்பட்டு, கிறிஸ்துவுக்குள் நடவுங்கள் (2: 6-7)
2. யாரும் உங்களை வஞ்சிக்காதவாறு எச்சரிக்கையாயிருங்கள் (2: 8-15)
4 காரியங்களுக்கு ஜாக்கிரதையாக இருக்கும்படி பவுல் எச்சரிக்கிறார்
அ. உலக ஞானம் (Philosophy): இந்த உபதேசம் கிறிஸ்துவை ஒரு தூதனாகக் காட்டுகிறது. கிறிஸ்துவை மனிதனாக வந்த தேவன் என்று பவுல் விவரிக்கிறார்.
ஆ. யூதநியாப்பிரமாண சடங்காரச்சாரங்களைக் கைக்கொள்ளுதல்: இந்த உபதேசம், உணவையும், விஷேத்த நாட்களையும், பாரம்பரிய சடங்குகளையும் முக்கியப்படுத்துகிறது.
இ. தேவதூதர்களை ஆராதித்தல்: இந்த உபதேசம், தூதர்களை ஆராதித்தல், மற்றும் தரிசனங்களைப் பார்த்தல்மூலம் தேவனை அறியமுடியும் என்று கற்பிக்கிறது.
ஈ. சரீரத்தை ஒடுக்குதலால் பரிசுத்தமடைதல்: இந்த உபதேசம், சரீரத்தில் வேதனைப்படுத்துவன்மூலம் ஒரு நபர் சுத்தமாகிறார் என்று கற்பிக்கிறது.
கொலோ-2: 8 லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
3. கிறிஸ்துவுக்குள் நமக்கு நடைபெற்றிருப்பவைகள் (2: 9-15)
4. வெளிப்படைச் செயல்களைவைத்து வாழவேண்டாம் (2: 16-23)
5. மேலானவைகளை நாடுங்கள் (3: 1-4)
6. பூமிக்குரியவைகளைச் சாகடியுங்கள் (3: 5-11)
கொலோ-3: 5 ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள். 8. இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள். 9. ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள், பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோடுங்கள்.
7. புதிய மனிதனுக்குரியவைகளைத் தரித்துக்கொள்ளுங்கள் (3: 12-17)
8. உறவுகளுக்கடுத்தவைகள்: (3: 18 முதல் 4: 1)
†மனைவி கணவனுக்குக் கீழ்படிதல்
†கணவன் மனைவியிடத்தில் அன்புகூருதல்
†பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்படிதல்
†பெற்றோர் பிள்ளைகளைக் கோபப்படுத்தாதிருத்தல்
†வேலைக்காரர்கள் எஜமான்களுக்குக் கீழ்படிதல்
†எஜமான்கள் வேலைக்காரரிடம் நேர்மையாயிருத்தல்
9. ஜெபம் மற்றும் நடத்தைக்குரிய ஆலோசனை (4: 2-6)
III. அதிகாரம்-4: 7-15 பவுலின் நண்பர்கள்
↻உண்மையுள்ளவர்கள்
↻உடன்வேலையாட்கள்
↻பிரியமான சகோதரர்கள்
↻கிறிஸ்துவின் ஊழியக்காரர்
↻உங்களுக்காக ஜெபத்தில் போராடுபவர்கள்
IV. அதிகாரம் 4: 16-18 முடிவுரை
கொலோ-4: 18 பவுலாகிய நான் என் கையினால் எழுதி, உங்களை வாழ்த்துகிறேன். நான் கட்டப்பட்டிருக்கிறதை நினைத்துக்கொள்ளுங்கள். கிருபை உங்களோடிருப்பதாக ஆமென்.
Comments
Post a Comment