எஸ்தர்


முகவுரை:

இது ஒரு சுவராஸ்மான புத்தகமாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தில் தேவன் என்பது ஒரு இடத்தில்கூட குறிக்கப் படாமலிருந்தபோதிலும், மக்களின் வாழ்வினூடாக எல்லாவிதத்திலும் தேவனே செயல்படுகிறவராக இருக்கிறார் என்பதை மிகவும் சிறப்பாகக் காட்டுகிறது.
ஒரு யூதப்பெண் பெர்சியா சாம்ராஜ்யத்தின் ராஜாத்தியாக மாறியது (எஸ்தர்)
ஒரு நல்ல மனிதன் காரணமே இல்லாமல் வெறுக்கப்பட்டது (மொர்தெகாய்)
ஒரு துன்மார்க்கன் தன்னுடைய சதித்திட்டத்தால் தானே பழியானது (ஆமான்)
இந்தப் புத்தத்தின் சம்பவங்கள் நெகேமியாவுக்கு முன்பு நடைபெற்றவைகள் ஆகும்.
எஸ்தர் 1: 1 இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களில் சம்பவித்ததாவது.
பாபிலோன் சாம்ராஜ்யம் முடிந்து, மேதிய-பெர்சிய சாம்ராஜ்யம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, வாழ்ந்த 4 ராஜாக்களைக்குறித்து எஸ்றாவின் புத்தகத்தில் வாசிக்கிறோம்.
எஸ்றா-4: 5-7 பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் காலமுழுதும், தரியு என்னும் பெர்சியா ராஜா அரசாண்டகாலமட்டும், அவர்கள் யோசனையை அவத்தமாக்கும்படி அவர்களுக்கு விரோதமாய் ஆலோசனைக்காரருக்குக் கைக்கூலி கட்டினார்கள். 6. அகாஸ்வேரு அரசாளுகிறபோது, அவனுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே, யூதாவிலும் எருசலேமிலும் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகப் பிரியாது எழுதினார்கள். 7. அர்தசஷ்டாவின் நாட்களிலும், பிஸ்லாமும், மித்திரேதாத்தும், தாபெயேலும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவும், பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவுக்கு ஒரு மனு எழுதினார்கள், அந்த மனு சீரிய எழுத்திலும், சீரிய பாஷையிலும் எழுதியிருந்தது.
தானியேல் பாபிலோனின் ராஜாக்களின் நாட்களிலும், மேதியா-பெர்சியாவின் ராஜாக்களாகிய கோரேஸ், தரியு மற்றும் அகாஸ்வேரு போன்ற ராஜாக்களின் நாட்களிலும்; இருந்தார்.
தானி-5: 31 மேதியனாகிய தரியு தன் அறுபத்திரண்டாம் வயதில் ராஜ்யத்தைக் கட்டிக்கொண்டான்.
தானி-9: 1 கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே, தானி-10: 1 பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பெல்ஷாத்சார் என்று பெயரிடப்பட்ட தானியேலுக்கு ஒரு காரியம் வெளியாக்கப்பட்டது.
நெகேமியா அர்தசஷ்டா ராஜாவின் நாட்களில் வாழ்ந்தார். நெகே-2: 1 அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே, திராட்சரசம் ராஜாவுக்கு முன்பாக வைத்திருக்கையில், நான் அதைஎடுத்து அவருக்குக் கொடுத்தேன், நான் முன்ஒருபோதும் அவர் சமுகத்தில் துக்கமாயிருந்ததில்லை. எனவே எஸ்தரின் புத்தகம், நெகேமியாவின் புத்தகத்தற்கு முன்பாக, எஸ்றாவின் புத்தகத்திற்கு இடையில், தோராயமாக எஸ்றாவின் 5ஆவது அதிகாரத்தை ஒட்டி வரவேண்டும்.
எஸ்தரின் புத்தகம் தேவன் யூதர்களை எவ்வாறு தப்புவித்துக் காப்பாற்றினார் என்பதை அழகாகப் படம்பிடித்துக் காட்டும் பழங்காலத்துக் காவியமாக இருக்கிறது. இஸ்ரவேலர்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட முக்கியமான மக்களாவார்கள். அவர்கள் அழிக்கப்படுதலுக்குள் செல்லும்போது தேவன் குறுக்கிட்டு அவர்களுக்காக யுத்தம் செய்வதை சரித்திரத்தின் எல்லாக் காலங்களிலும் நம்மால் பார்க்கமுடிகிறது. இன்றைக்கு இரட்சிக்கப்பட்ட தேவஜனங்கள்(சபை) அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட, விசேஷித்த மக்களாக இருக்கிறோம். நம்மைக் காப்பதிலும் தேவன் எப்போதும் கரிசனை உள்ளவராக இருக்கிறார் என்பதை நாம் மறக்கவேண்டாம்.

எஸ்தரின் தொகுப்பு:

(மொத்தம் 10 அதிகாரங்கள் உள்ளன. 9 பகுதிகளாகப் பிரிக்கலாம்)
I. அதிகாரம் 1 முதல் 2: 18 வரை எஸ்தரின் உயர்வு
1. ராஜாவின் 180 நாட்கள் விருந்து
2. வஸ்தி ராஜமேன்மையை இழத்தல்
3. புதிய ராஜஸ்திரீ தேடப்படுதல்
4. எஸ்தர் கொண்டுவரப்பட்டு தயைபெறுதல்
5. எஸ்தர் ராஜாத்தியாக உயர்த்தப்படுதல்

ராஜாத்தியாகிய வஸ்தியின் வீழ்ச்சிக்கான காரணம்:

எஸ்தர்-1: 10-12, 15-22 ஏழாம் நாளிலே ராஜா திராட்சரசத்தினால் களிப்பாயிருக்கும்போது, மகாரூபவதியாயிருந்த ராஜஸ்திரியாகிய வஸ்தியின் சௌந்தரியத்தை ஜனங்களுக்கும் பிரபுக்களுக்கும் காண்பிக்கும்படி, ராஜகிரிடம் தரிக்கப்பட்டவளாக அவளை ராஜாவுக்குமுன்பாக அழைத்து வரவேண்டுமென்று, 11. ராஜாவாகிய அகாஸ்வேருவின் சமுகத்தில் சேவிக்கிற மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் என்னும் ஏழு பிரதானிகளுக்கும் கட்டளையிட்டான். 12. ஆனாலும் பிரதானிகள் மூலமாய் ராஜா சொல்லியனுப்பின கட்டளைக்கு ராஜஸ்திரியாகிய வஸ்தி வரமாட்டேன் என்றாள், அப்பொழுது ராஜா கடுங்கோபமடைந்து, தனக்குள்ளே மூர்க்கவெறிகொண்டான். 15. ராஜாவாகிய அகாஸ்வேரு பிரதானிகள் மூலமாய்ச் சொல்லியனுப்பின கட்டளையின்படி ராஜஸ்திரியாகிய வஸ்தி செய்யாமற்ப் போனதினிமித்தம், தேசச்சட்டத்தின்படி அவளுக்குச் செய்யவேண்டியது என்ன என்று கேட்டான். 16. அப்பொழுது மெமுகான் ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்னே பிரதியுத்தரமாக: ராஜஸ்திரியாகிய வஸ்தி ராஜாவுக்கு மாத்திரம் அல்ல, ராஜாவாகிய அகாஸ்வேருவினுடைய சகல நாடுகளிலுமுள்ள சகல பிரபுக்களுக்கும் சகல ஜனங்களுக்குங்கூட அநியாயஞ்செய்தாள். 17. ராஜாவாகிய அகாஸ்வேரு ராஜஸ்திரியாகிய வஸ்தியைத் தமக்கு முன்பாக அழைத்துவரச் சொன்னபோது, அவள் வரமாட்டோம் என்கிற செய்தி எல்லா ஸ்திரிகளுக்கும் பிரசித்தமானால், அவர்களும் தங்கள் புருஷரைத் தங்கள் பார்வையில் அற்பமாய் எண்ணுவார்கள். 18. இன்றையதினமே பெர்சியாவிலும் மேதியாவிலுமுள்ள பிரபுக்களின் ஸ்திரிகள் ராஜஸ்திரியின் செய்தியைக் கேட்கும்போது, ராஜாவின் பிரபுக்களுக்கெல்லாம் அப்படியே சொல்லுவார்கள். மிகுந்த அசட்டையும் எரிச்சலும் விளையும். 19. ராஜாவுக்குச் சம்மதியாயிருந்தால், வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக்கூடாது என்றும், அவளுடைய ராஜமேன்மையை அவளைப் பார்க்கிலும் உத்தமியாகிய மற்றொரு ஸ்திரிக்கு ராஜா கொடுப்பாராக என்றும், அவரால் ஒரு ராஜகட்டளை பிறந்து, அது மீறப்படாதபடிக்கு, பெர்சியாவுக்கும் மேதியாவுக்கும் உரிய தேசச் சட்டத்திலும் எழுதப்படவேண்டும். 20. இப்படி ராஜா தீர்த்த காரியம் தமது விஸ்தீரணமான ராஜ்யமெங்கும் கேட்கப்படும்போது, பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள எல்லா ஸ்திரிகளும் தங்கள் புருஷரைக் கனம்பண்ணுவார்கள் என்றான். 21. இந்த வார்த்தை ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் நலமாய்த் தோன்றினதினால், ராஜா மெமுகானுடைய வார்த்தையின்படியே செய்து, 22. எந்தப் புருஷனும் தன் வீட்டுக்குத்தானே அதிகாரியாயிருக்க வேண்டும் என்றும், இதை அந்தந்த ஜனங்களுடைய பாஷையிலே பிரசித்தம் பண்ணவேண்டும் என்றும், அந்தந்த நாட்டில் வழங்குகிற அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசுகிற பாஷையிலும், ராஜாவின் சகல நாடுகளுக்கும் கட்டளை எழுதி அனுப்பினான்.
II. அதிகாரம் 2: 19-23 சதித்திட்டதை மொர்தெகாய் முறியடித்தல்
எஸ்தர்-2: 5-6 அப்பொழுது சூசான் அரமனையிலே பென்யமீனியனாகிய கீசின் குமாரன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் குமாரன் மொர்தெகாய் என்னும் பேருள்ள ஒரு யூதன் இருந்தான். 6. அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டு போகிறபோது, அவனோடேகூட எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களில் ஒருவனாயிருந்தான்.
III. அதிகாரம் 3 ஆமானின் சதி
1. மோர்தெகாய் (யூதன்) ஆமானை வணங்க மறுத்தது
எஸ்தர்-3: 1-2 இந்த நடபடிகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேரு அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய ஆசனத்தை உயர்த்திவைத்தான் 2. ஆகையால் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் எல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள், அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டு இருந்தான், ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவும் இல்லை.
2. யூதர்கள் அனைவரையும் தீர்த்துக்கட்ட ஆமான் திட்டமிட்டது.
IV. அதிகாரங்கள் 4 முதல் 5: எஸ்தரின் திட்டம்
1. மொர்தெகாயின் வேதனை (4: 1-3)
2. எஸ்தர் மொர்தெகாயோடு பேசுதல் (4: 4-17)
எஸ்தர்-4: 7-8, 13-17 அப்பொழுது மொர்தெகாய் தனக்குச் சம்பவித்த எல்லாவற்றைப் பற்றியும், யூதரை அழிக்கும்படி ஆமான் ராஜாவின் கஜானாவுக்கு எண்ணிக் கொடுப்பேன் என்று சொன்ன பணத்தொகையைப் பற்றியும் அவனுக்கு அறிவித்ததும் அன்றி, 8. யூதர்களை அழிக்கும்படி சூசானில் பிறந்த கட்டளையின் நகலையும் அவனிடத்தில் கொடுத்து, அதை எஸ்தருக்குக் காண்பித்துத் தெரியப்படுத்தவும், அவள் அகத்தியமாய் ராஜாவினிடத்திற் போய், அவனிடத்தில் தன் ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணவும் மன்றாடவும் வேண்டுமென்று அவளுக்குச் சொல்லச்சொன்னான். 13. மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரமனணயில் இருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக்கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே. 14. நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள், நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும் படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான். 15. அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும் சொல்லச்சொன்னது: 16. நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம் பண்ணுங்கள், நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம், இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன், நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள். 17. அப்பொழுது மொர்தெகாய் புறப்பட்டுப்போய், எஸ்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தான்.
3. எஸ்தர் ராஜாவுக்கு முன்பாக தன் ஜனத்துக்காக நிற்றல் (5: 1-7)
4. எஸ்தரின் விருந்தளிப்புத் திட்டமும், ஆமானின் மகிழ்வும், வேதனையும் (5: 8-14)
V. அதிகாரம் 6: ராஜாவின் தூக்கமின்மை
1. மோர்தெகாயின் செயல் எழுதப்பட்டிருந்தது
2. மொர்தெகாயை கனப்படுத்துதலின் திட்டம் ஆமாலே முன்வைக்கப்பட்டது
3. ஆமானே மொர்தெகாயை கனப்படுத்தியது
VI. அதிகாரம் 7: ஆமானின் சோகமான முடிவு
1. ராஜாவுக்கும் ஆமானுக்கும் எஸ்தரின் விருந்து (7: 1-5)
2. ஆமான் கண்டுபிடிக்கப்பட்டு தூக்கிலிடப்படுதல் (7: 6-10)
VII. அதிகாரங்கள் 8 முதல் 9: 17 வரை: யூதர்கள் தப்புவிக்கப்படுதல்
VIII. அதிகாரம் 9: 18-32 பூரீம் பண்டிகை
XI. அதிகாரம் 10 மொர்தெகாய் உயர்த்தப்படுதல்

Comments