எங்கள் சபை ஊழியம் மற்றும் சபையின் போதகரைப் பற்றி
எங்கள் சபை ஊழியம்
எங்கள் சபை ஊழியம் கி.பி.2000ல் ஆரம்பிக்கப்பட்டு தேவனுடைய கிருபையினால் இதுவரையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மந்திரவாதங்கள் மற்றும் சூனியங்களால் கட்டப்பட்டவர்கள் விடுதலையடைந்து சத்தியத்தை அறிகிற அறிவில் வளருகிறார்கள். எதிர்ப்புகள் தடைகள் மத்தியிலும் தேவன் உண்மையுள்ளவராக இருந்து சபையை நிலைத்திருக்கச் செய்திருக்கிறார். இனம் மதம் சபைப்பாகுபாடின்றி யாவரையும் நேசித்து கடவுளின் வார்த்தையின் சத்தியத்தைக் கற்றுக்கொடுத்து விடுதலைக்குள்ளும், தேவராஜ்யத்தின் தரிசனத்திற்குள்ளும் வழிநடத்தி வளர்ப்பது எங்களுடைய தரிசனமாகும்.
திருச்சபையில் நடைபெறுகிற ஊழிய விபரங்கள்:
நாள்
|
நேரம்
|
நோக்கம்
|
ஞாயிறு
|
காலை 8:00முதல் 10:30
|
சபைகூடிவருதல்
|
தினமும்
|
மாலை 6:00 முதல் 7:30 மாலை
|
மன்றாட்டு ஜெபம்
|
தினமும்
|
காலை 5:00 முதல் 5:30
|
அதிகாலை ஜெபஆராதனை
|
வெள்ளி
|
காலை 10:30 முதல் 12:30
|
உபவாச ஜெபம்
|
மாதந்தோறும் 4ஆவது சனி
|
காலை 10:30 முதல் 02:00
|
விடுதலை ஜெபம்
|
சபையின் போதகரைப் பற்றி
Pr.K.ஜோசப் அவர்கள் காளையார்கோவிலுள்ள தேவனுடைய வீடு என்ற சபையின் போதகராக தேவனால் வல்லமையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறார்.
இவர் சபைகளிலும் வாலிபர் முகாம்களிலும் தேவனுடைய சத்தியத்தைக் கற்றுக்கொடுத்தல் உள்ளார்ந்த சுகமும் விடுதலையும் (Inner Healing & Deliverance) என்ற விடுதலை ஊழியம் ஊழியர்களை உருவாக்கும் ஊழியம் புத்தக ஊழியம் போன்றவைகள் மூலமாக சபைகளுக்கும் தனிநபர்களுக்கும் வேதவசனங்களைக் கற்றுக்கொடுத்து பிசாசின் கட்டுக்களிலிருந்தும் நோயின் பிடியிலிருந்தும் அநேகரை விடுதலைக்குள் நடத்தி வருகிறார். "சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" என்ற வேதவசனத்தின்படி இவர் பலருக்கு தேவனால் பயன்படுத்தப்படும் ஆசீர்வாதத்தின் பாத்திரமாக இருக்கிறார்.
Comments
Post a Comment