வேதாகமத்திலுள்ள இரகசியங்கள்
'இரகசியங்கள்' என்பது 'மறைபொருள்' என்றும் அழைக்கப்படுகிறது. வேதாகமத்திலே மறைவானவைகள், வெளிப்படுத்தப்பட்டவைகள் என்று இரண்டு பக்கங்கள் உள்ளன.
உபாகமம்-29: 29ல் மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள், வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.
தேவன் சில காரியங்களை பழைய ஏற்பாட்டுக் காலத்திற்கு மறைத்து புதிய ஏற்பாட்டுக் காலத்திலே அவைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். சில காரியங்களை ஆதிசபையின் காலத்திற்கு மறைத்து அவைகளைக் கடைசிக்கால சபைக்கு தேவன் வெளிப்படுத்திக்கொண்டு வருகிறார்.
வெளிப்படுத்தப்பட்டவைகள் நமக்குரியவைகள், மறைவானவைகள் தேவனுக்கே உரியவைகள். அவைகளை யாருக்கு, எப்போது, எப்படி வெளிப்படுவது என்ற உரிமை அவருக்கே உரியதாக இருக்கிறது. வேதாமத்தில் எழுதப்பட்டிருக்கிற, ஓரளவுக்கு வெளிப்படுத்தப்பட்டும் இருக்கிற இரகசியங்களைக் குறித்து உங்களுக்குக் கற்றுக்கொடுக்க பரிசுத்த ஆவியானவர் அடிமையைப் பயன்படுத்துவாராக!
நீங்கள் ஆராய வேண்டிய இரகசியங்களைக் குறித்த வேதவசனங்கள்:
நான்கு விதமான இரகசியங்களைக் குறித்து நாம் பார்க்கவிருக்கிறோம்:
1. தேவபக்திக்குரிய இரகசியம்
2. தேவஇரகசியம்
3. அக்கிரமத்தின் இரகசியம்
4. பாபிலோனின் இரகசியம்
1. தேவபக்திக்குரிய இரகசியம்:
1தீமோத்தேயு-3: 16 'அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது'
1. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்,
(இயேசுவின் பிறப்பு)
2. ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார்,
(இயேசுவின் மரணம்)
3. தேவதூதர்களால் காணப்பட்டார்,
(இயேசுவின் உயிர்ப்பு)
4. புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார்,
(இயேசுவைக் குறித்த சுவிசேஷ அறிவிப்பு)
5. உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார்,
(இயேசுவால் வரும் இரட்சிப்பு)
6. மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார். (இஸ்ரவேல் தேசத்தாரால்)
(இயேசுவின் இரண்டாம் வருகையின் மகிமையான பவணி)
2. தேவ இரகசியம்:
வெளி-10: 6 இனி காலம் செல்லாது, ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது 'தேவரகசியம்' நிறைவேறும்.
தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாக அறிவிக்கப்பட்ட தேவஇரகசியத்தைக் குறித்து நாம் அறியவேண்டியது என்னவென்றால், இஸ்ரவேலர் அல்லாத புறஜாதிகளாகிய மற்ற தேசத்தாருடைய இரட்சிப்பு (இதில் நாமும் உள்ளடங்குகிறோம்) முழுமைப்படுதலுக்குள் வருதலை அது குறிக்கிறது.
ரோம-11: 25 மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன், அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.
நாமெல்லாரும் இரட்சிக்கப்பட்டிருப்பது தேவனுடைய திட்டத்தில் முக்கியமான பங்காக இருக்கிறது. புறஜாதியரின் மத்தியில் இன்னும் இரட்சிப்பின் வேலை நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. புறஜாதியாரை இரட்சித்திட ஆயிரக்கணக்கான வருடங்களைத் தேவன் குறித்துள்ளார். இது அவருடைய கிருபை. ஆனால் இஸ்ரவேல் தேசத்தாராகிய யூதஜனத்தையோ ஒரேநாளில் தேசஅளவில் அவர் இரட்சிக்கவிருக்கிறார், அதுவும்
தேவனுடைய கிருபையே.
ரோம-16: 25 ஆதிகாலமுதல் அடக்கமாயிருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளியரங்கமாக்கப்பட்டதும், சகல ஜாதிகளும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படிக்கு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாயிருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிறதான, (எபே-5: 32, 6: 19)
3. அக்கிரமத்தின் இரகசியம்:
2தெச-2: 7 அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது, ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது.
4. பாபிலோன் வேசியின் இரகசியம்:
வெளி-17: 5 மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது. முதலாவது இரண்டு இரகசியங்களும் இயேசு கிறிஸ்துவையும் அவருடைய மணவாட்டியான சபையையும் குறிக்கிறது இரண்டாவது உள்ள இரண்டு இரகசியங்களும் அந்திக்கிறிஸ்துவையும் அவனுடைய மணவாட்டியாகிய பாபிலோன் வேசி என்ற மதஅமைப்பையையும் குறிக்கிறது.
II. தேவ இரகசியம்:
வெளி-10: 6 இனி காலம் செல்லாது, ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது 'தேவரகசியம் ' நிறைவேறும்.
தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாக அறிவிக்கப்பட்ட தேவஇரகசியத்தைக் குறித்து நாம் அறியவேண்டியது என்னவென்றால், இஸ்ரவேலர் அல்லாத புறஜாதிகளாகிய மற்ற தேசத்தாருடைய இரட்சிப்பு (இதில் நாமும் உள்ளடங்குகிறோம்) முழுமைப்படுதலுக்குள்வ ருதலை அது குறிக்கிறது.
ரோம-11: 25 மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன், அதென்னவெனில்,
புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.
சபையைக் குறித்த அதிலும் குறிப்பாக இஸ்ரவேலரல்லாதவர்கள் இரட்சிக்கப்பட்டு சபையில் சேர்க்கப்படுதல் என்பது பழைய ஏற்பாட்டுக்காலத்தில் வெளிப்படுத்தப்படாத இரகசியமாக இருந்தது.
ஆதிஅப்போஸ்தல காலசபையின் நாட்களில் புறஜாதியாரின் இரட்சிப்பைக் குறித்து இயேசு கிறிஸ்து பேதுருவுக்கு வெளிப்படுத்தியபோது இது அவருக்குப் புரிந்துகொள்ள முடியாத புதிராக இருந்தது.
அப்-10: 9-14 பேதுரு ஆறாம்மணி நேரத்திலே ஜெபம்பண்ணும்படி மேல்வீட்டில் ஏறினான். அவன் மிகுந்த பசியடைந்து சாப்பிட மனதாயிருந்தான், அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணுகையில், அவன் ஞானதிருஷ்டியடைந்து, வானம் திறந்திருக்கிறதாகவும், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒருவிதமான கூடு தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும், அதிலே பூமியிலுள்ள சகலவிதமான நாலுகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான். அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று. அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான்.
பூமியிலுள்ள சகலவிதமான நாலுகால் ஜீவன்களும் இருக்கிறதாகக் கண்டான். இஸ்ரவேலர் மாத்திரமல்ல, பூமியிலுள்ள சகல மக்களும் தேவனுடைய இரட்சிப்பிற்கு உரியவரிகளாக இருக்கிறார்கள் என்று தேவன் பேதுருவுக்கு வெளிப்படுத்த முயற்சித்தார். ஆனால் பேதுருவால் அதை முதலில் புறிந்துகொள்ள முடியவில்லை.
வெளி-10: 6 இனி காலம் செல்லாது, ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது 'தேவரகசியம்' நிறைவேறும்.
தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாக அறிவிக்கப்பட்ட தேவஇரகசியத்தைக் குறித்து நாம் அறியவேண்டியது என்னவென்றால், இஸ்ரவேலர் அல்லாத புறஜாதிகளாகிய மற்ற தேசத்தாருடைய இரட்சிப்பு (இதில் நாமும் உள்ளடங்குகிறோம்) முழுமைப்படுதலுக்குள் வருதலை அது குறிக்கிறது.
ரோம-11: 25 மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன், அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.
சபையைக் குறித்த அதிலும் குறிப்பாக இஸ்ரவேலரல்லாதவர்கள் இரட்சிக்கப்பட்டு சபையில் சேர்க்கப்படுதல் என்பது பழைய ஏற்பாட்டுக்காலத்தில் வெளிப்படுத்தப்படாத இரகசியமாக இருந்தது.
ஆதிஅப்போஸ்தல காலசபையின் நாட்களில் புறஜாதியாரின் இரட்சிப்பைக் குறித்து இயேசு கிறிஸ்து பேதுருவுக்கு வெளிப்படுத்தியபோது இது அவருக்குப் புரிந்துகொள்ள முடியாத புதிராக இருந்தது.
அப்-10: 9-14 பேதுரு ஆறாம்மணி நேரத்திலே ஜெபம்பண்ணும்படி மேல்வீட்டில் ஏறினான். அவன் மிகுந்த பசியடைந்து சாப்பிட மனதாயிருந்தான், அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணுகையில், அவன் ஞானதிருஷ்டியடைந்து, வானம் திறந்திருக்கிறதாகவும், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒருவிதமான கூடு தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும், அதிலே பூமியிலுள்ள சகலவிதமான நாலுகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான். அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று. அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான்.
பூமியிலுள்ள சகல மக்களும் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற தேவனுடைய வெளிப்பாட்டைப் பேதுருவால் புரிந்துகொள்ள முடியவில்லை. புறஜாதிகள் அனைவரும் தீட்டானவர்கள் என்று பேதுரு கருதினார். அவர்கள் தேவனுக்குத் தூரமானவர்கள் என்றே அவர் எண்ணினார். ஆனால் தேவனோ தாம் படைத்த அனைவரையும் மீட்பதில் தம்முடைய அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
அப்-10: 43 அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக் குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.
அப்-10: 46 பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்தஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக் குறித்துப் பிரமித்தார்கள்.
ரோம-16: 25 ஆதிகாலமுதல் அடக்கமாயிருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளியரங்கமாக்கப்பட்டதும், சகல ஜாதிகளும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படிக்கு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாயிருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகின்றன.
Comments
Post a Comment