அடையாளங்கள் அற்புதங்கள்
சங்-78: 43 அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.
யாத்-7: 3 நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்து தேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன்.
- எகிப்தியருக்கும் எதிகரிகளுக்கும் செய்யப்பட்டது அடையாளங்களாகும்.
தண்ணீர் முதல் தலைச்சன் பிள்ளைவரை தேவன் எகிப்தியருக்கு அடையாளங்களைச் செய்தார் (10 விதமான அடையாளங்கள் (சங்-78: 43-51)
- இஸ்ரவேல் மக்களுக்குச் செய்யப்பட்டது அற்புதங்களாகும்.
வனாந்திரம் முதல் வயல்வெளிவரை (கானான்) தேவன் இஸ்ரவேலருக்கு அற்புதங்களைச் செய்தார் (சங்-78: 52-55)
- அடையாளங்கள் எதிரிகளை எச்சரிப்பதற்கு, கண்டிப்பதற்கு, தண்டிப்பதற்கு, நியாந்தீர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
- அற்புதங்கள் மக்களை எழுப்புவதற்கு, போஷிப்பதற்குக் காப்பாற்றுவதற்கு, வழிநடத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
உதாரணங்கள்:
- எகிப்திலே நல்ல தண்ணீர் இரத்தமாக மாற்றப்பட்டது- அடையாளம்
- வனாந்தரத்திலே கசப்புத் தண்ணீர் இனிப்பாக மாற்றப்பட்டது- அற்புதம்
- எகிப்திய வீட்டிலே இருள் மூடியது- அடையாளம்
- வனாந்தரத்திலே அக்கினி ஸ்தம்பம் இருளை வெளிச்சமாக்கியது- அற்புதம்
- எகிப்திலே எகிப்தியரைக் கொடிய வாதைகள், புண்கள், பேன்கள், வெட்டுக்கிளிகள், கல்மழைகள் தாக்கியது- அடையாளம்
- வனாந்தரத்திலே இஸ்ரவேலருக்கு வியாதியோ, பெலவீனமோ இல்லாமலும், மன்னாவைக் கொடுத்தும், காடைகளைக் குவித்தும் வழிநடத்தியது- அற்புதம்
கடைசி நாட்களின் இரண்டு வகைக் கூட்டங்கள்:
1. அந்திக்கிறிஸ்துவின் கூட்டம் (பார்வோனும் எகிப்தியரும்)
பார்வோனுடைய சேனை இஸ்ரவேலர்களைத் துரத்திக்கொண்டு வந்தது. அதைப்போலவே அந்திக்கிறிஸ்துவின் சேனையும் இரடசிக்கப்பட்ட மக்களைத் துரத்திக்கொண்டுவருவார்கள்.
யாத்-14: 23 அப்பொழுது எகிப்தியர் அவர்களைத் தொடர்ந்து, பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் அவர்கள் பிறகாலே சமுத்திரத்தின் நடுவே பிரவேசித்தார்கள்.
பார்வோனுடைய சேனையைக் கர்த்தர் கலங்கடித்து, வருத்தப்படுத்தி, அவர்களுடைய சேனையில் ஒருவனாகிலும் தப்பாதவாறு மூழ்கடித்து முறியடித்தார்.
யாத்-14: 24 கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் கர்த்தர் அக்கினியும் மேகமுமான ஸ்தம்பத்திலிருந்து எகிப்தியரின் சேனையைப் பார்த்து, அவர்கள் சேனையைக் கலங்கடித்து, 25. அவர்களுடைய இரதங்களிலிருந்து உருளைகள் கழலவும், அவர்கள் தங்கள் இரதங்களை வருத்தத்தோடே நடத்தவும் பண்ணினார், அப்பொழுது எகிப்தியர்: இஸ்ரவேலரைவிட்டு ஓடிப்போவோம், கர்த்தர் அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார் என்றார்கள். 26. கர்த்தர் மோசேயை நோக்கி: ஜலம் எகிப்தியர்மேலும் அவர்களுடைய இரதங்கள்மேலும் அவர்களுடைய குதிரைவீரர்மேலும் திரும்பும்படிக்கு, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டு என்றார். 27. அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான், விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய்த் திரும்பிவந்தது, எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார். 28. ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும், அவர்கள் பின்னாகச் சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது, அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை.
2. இயேசு கிறிஸ்துவின் கூட்டம் (இயேசு கிறிஸ்துவும் பரிசுத்தவான்களும்)
1கொரி-10: 1-4 இப்படியிருக்க சகோதரரே, நீங்கள் எவைகளை அறிய வேண்டுமென்றிருக்கிறேனென்றால், நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள். 2. எல்லாரும் மேசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள். 3. எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள். 4. எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள், அந்தக் கன்மலை கிறிஸ்துவே.
1கொரி-10: 11 இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது, உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. (வேதப்புத்தகம் நமக்காக மாத்திரமல்ல, நமக்கு எழுதப்பட்டதாகவும் இருக்கிறது).
தேவனுடைய அற்புதங்கள் - சாத்தானுடைய அற்புதங்கள்:
தேவன் தம்முடைய ஜனத்திற்கு அற்புதங்களைச் செய்கிறார், செய்வார், அது சாத்தானுடைய ஜனங்களுக்கு அடையாளங்களாக இருக்கும். (வனாந்தரத்தில் மன்னாவைக்கொண்டு போஷித்தது, கன்மலையைப் பிளந்து தண்ணீர் கொடுத்தது, பாலில் மேகஸ்தம்பத்தால், இரவில் அக்கினி ஸ்தம்பத்தால் நடத்தியது, எதிரிகளின் தாக்குதலினின்று ஜெயம்கொடுத்தது...)
சாத்தான் அவனுடைய ஜனத்திற்கு அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்யும்படி அனுமதிக்கப்படுவான், அது தேவனுடைய ஜனங்களுக்கு அடையாளங்களாக இருக்கும்.
யாத்-7: 10-12 மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று. 11. அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள். 12. அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின, ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிற்று.
- மந்திரவாதிகளின் கையிலிருந்த கோல்கள் பாம்பாக மாறியது அவர்களுக்கு அற்புதம், மோசேக்கும் ஆரோனுக்குமோ அது அடையாளம். ஆனால் ஆரோனின் கையிலிருந்த கோல் அந்தப் பாம்புகளை விழுங்கியது பர்வோனுக்கும் மந்திரவாதிகளுக்கும் அடையாளம், மோசேக்கு ஆரோனுக்குமோ அற்புதம்.
- எகிப்தியர் வீட்டிலே இருள், வியாதி, தவளைகள், பேன்கள், மரணம். நிலத்திலே கல்மழை, வெட்டுக்கிளிகள். ஆனால் அவர்களுக்கு அருகாமையில் இருந்த இஸ்ரவேலர் வீட்டிலோ வெளிச்சம், பாதுகாப்பு, ஜீவன். நிலத்திலோ எந்தவிதத் தாக்கமும், சேதமும் இல்லாத நிலை (அடையாளம்-அற்புதம்).
அந்திக்கிறிஸ்துவின் நாட்களில் நமக்கு:
இதற்குமுன்பு 40 வருடங்கள் வனாந்தரத்தில் தேவன் தம் ஜனங்களைப் போஷித்தார் (மன்னா)
இனிமேல் 7 வருடங்கள் அந்திக்கிறிஸ்துவின் நாட்களில் தேவன் நம்மைப் போஷிப்பார்.
- செங்கடலை இரண்டாகப் பிளந்து அவர்களை நடத்தியதுபோல நம்மையும் நடத்துவார்.
- சத்துருக்களைக் கலங்டித்ததுபோல கடைசிநாட்களிலும் 7 முத்திரைகள், 7 எக்காளங்கள், 7 கோபச்சலசங்களின் நியாயத்தீர்ப்பால் அந்திக்கிறிஸ்துவின் ஆட்களைக் கலங்கடிப்பார்.
வெளி-12: 13-14 வலுசர்ப்பமானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண்பிள்ளையைப்பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தினது. 14. ஸ்திரீயானவள் அந்தப் பாம்பின் முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.
ஆண்பிள்ளையைப் பெற்ற ஸ்திரீ:
வெளி-12: 1 அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது: ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன.
வெளி-12: 5 சகல ஜாதிகளையும் இரும்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள், அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஆண்பிள்ளை என்பது இயேசு கிறிஸ்துவையும், அவரைப் பெற்ற ஸ்திரீ என்பது இஸ்ரவேல் தேசத்தையும் குறிக்கிறது.
வெளி-12: 6 ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள், அங்கே ஆயிரத்திருநூற்று அறுபதுநாளளவும் அவளைப் போஷிப்பதற்காகத் தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது.
(1260 நாட்கள் என்பதும், 12: 14ன் ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் என்பதும் மகாஉபத்திரவத்தின் நாட்களாகிய மூன்றரை வருடங்களைக் குறிக்கிறது)
அந்திக்கிறிஸ்துவும் அவனுடைய சேனையும் தேவஜனங்களாகிய பரிசுத்தவான்களோடு யுத்தம்பண்ணுவார்கள் (அந்திக்கிறிஸ்துவின் முத்திரையைப் பெற்றவர்கள்).
வெளி-13: 6-18 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும் படிக்கும், 17. அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. 18. இதிலே ஞானம் விளங்கும், அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன், அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது, அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு (666).
வெளி-13: 1 பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் (அந்திக்கிறிஸ்து) எழும்பிவரக் கண்டேன், அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன, அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன.
வெளி-13: 11 பின்பு, வேறொரு மிருகம் (கள்ளத் தீர்க்கதரிசி) பூமியிலிருந்து எழும்பக் கண்டேன், அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது.
வெளி-13: 7 மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.
இயேசு கிறிஸ்துவும் அவருடைய சேனையும் உலகஜனமாகிய அந்திக்கிறிஸ்துவோடும், அவனுடைய சேனையோடும் யுத்தம்பண்ணுவார்கள் (இயேசு கிறிஸ்துவின் முத்திரையைப் பெற்றவர்கள்)
எபே-1: 13 நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.
வெளி-19: 11,14-15 பின்பு, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன், இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவ ரென்னப்பட்டவர்: அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்... பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந் தரித்தவர்களாய், வெள்ளைக்குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள். புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது, இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார், (12: 5) அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.
கர்த்தருக்குச் சித்தமானால் கர்த்தருடைய வருகைக்குரிய அடையாளங்களைக் குறித்து பின்வரும் நாட்களில் பார்ப்போம்!
Comments
Post a Comment