ஆவியானவரின் அடையாளம்:





சபையைப் பெலப்படுத்தி நடத்திச் செல்வதற்காக தேவனால் கொடுக்கப்பட்டவராக பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். திரித்துவத்தில் மூன்றாவது நபராக இருக்கும் ஆவியானவர் இப்பொழுது சபையோடு இருந்து எங்கும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். வெளிப்படுத்தின விசேஷத்தில் ஆவியானவரைக் குறித்து யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட முக்கிய குறிப்புக்களை நாம் இப்பொழுது பார்க்கவிருக்கிறோம்.

வெளி-1: 4 அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,'

ஆவியானவரோடு ஏழு என்ற எண் எல்லா இடங்களிலும் இணைக்கப்பட்டு வருவதை நாம் கவனிக்க முடிகிறது. ஏழு என்ற எண் வேதாகமத்தின்படி பூரணத்தை அல்லது முழுமையைக் குறிப்பதாக உள்ளது (Perfection or Completion). பரிசுத்த ஆவியானவர் குறைவற்றவராக, பழுதற்றவராக, முழுமையானவராக இருக்கிறார்.

1. சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கும் ஆவி:

இயேசு பூமியை விட்டுப் பரலோகத்திற்குச் சென்றதும் தாம் வாக்குப்பண்ணியபடி பரிசுத்த ஆவியானவரைப் பூமிக்கு அனுப்பி வைத்தார். தமது சீடர்களையும் அப்போஸ்தலர்களையும் அதாவது சபையைத் தேற்றும்படி, கற்றுக்கொடுத்து நடத்திச் செல்லும்படி, பாவங்களைக் குறித்து உணர்த்துவித்து சுத்திகரிப்புக்குள் நடத்தும்படி, சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்தும்படி, ஆலோசனை கொடுக்கும்படி ஆவியானவர் பூமியிலே இருக்கிறார். பூமியிலே இருந்துnhண்டிருக்கும் ஆவியானவர் பரலோகத்திலும் சிங்காசனத்திற்கு முன்பாக இருப்பதை யோவான் பார்க்கிறார். ஒரேநேரத்தில் பூலோகத்திலும் பரலோகத்திலும் ஆவியானவர் இருப்பது சாத்தியமா? சரீரத்தில் இருப்பவர்களால் அதுகூடாது. ஆவியானவராக இருப்பதால் இது கூடும். இயேசு சரீரத்தோடு இருப்பதால் பூமியில் வாழ்ந்தபோது அவர் பரலோகத்தில் இல்லை, இப்பொழுது பரலோகத்தில் இருப்பதால் அவர் பூமியிலே இல்லை.

உதாரணத்திற்கு:


  • சரீரப்பிரகாரமாக இ;ங்கே இருக்கிற நீங்கள், இதே நேரத்தி;ல் சரீரத்தில் உங்கள் வீட்டிலும் உங்களால் இருக்க முடியுமா?
  • ஆனால் இங்கே இருந்துகொண்டிருக்கும் இதே நேரத்தில் மனதளவில் உங்கள் வீட்டிலும் உங்களால் இருக்க முடியுமா?
சர்வத்தையும் ஆளுகிற இராஜாதி இராஜாவாகிய தேவனுடைய அதிகாரத்தை அறிந்து அதை எங்கும் எப்பொழுதும் நிலைப்படுத்திட, செயல்படுத்திட அவர் சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கும் ஆவியாக இருக்கிறார். ஆவியானவரைச் சார்ந்து வாழ்கிறவரகள், ஆவியானவருடைய நடத்துதலுக்குக் கீழ்படிந்து வாழ்பவர்கள் தேவனுடைய ஆளுகைக்குள் இருப்பார்கள் என்பதை நாம் இதன்மூலம் அறிந்து கொள்கிறோம்.

கலாத்தியர்-5: 25 நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்.
ரோமர்-8: 14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
வெளி-4: 5 தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.

2. ஏழு அக்கினி தீபங்களாகிய ஆவி:

பரிசுத்த ஆவியானவர் எங்கெல்லாம் பிரசன்னமாகிறாரோ அங்கெல்லாம் வெளிச்சம் வரும். இருளை நீக்கும் வெளிச்சமாக ஆவியானவர் இருக்கிறார் என்பதை இது குறிப்பிடுகிறது.
பூரண வெளிச்சத்தின் மூலமாக:
அ. வெளிச்சம்:

  • இருள் அகற்றப்படுகிறது (பாவ, சாப, மரண இருள்) Darkness is Removed
  • சத்தியம் வெளிப்படுத்தப்படுகிறது- Truth is Revealed
  • ஜீவன் பிறப்பிக்கப்படுகிறது- Life is Released
நம்முடைய மனதிலும், இருதயத்திலும், வாழ்க்கையிலும், குடும்பத்திலும், நம்முடைய வாழ்வின் எல்லாப் பகுதியிலும் ஆவியானவரால் வெளிச்சம் பிரகாசிப்பதை எதிர்பார்ப்போமாக. அறிதல், வெளிப்பாடுகள், புரிந்துகொள்ளுதல்கள் போன்றவைகள் ஆவியானவரால் நமக்கு அருளப்படுகிறது.

ஆ. அக்கினி:

  • தேவையற்றவைகளைச் சுட்டெரிக்கும் (குப்பைகள், மாம்சம், சுயம் போன்றவைகள்)
  • தேவையானவைகளைச் சுத்திகரிக்கும் (பொன், விசுவாசம்- 1பேதுரு-1: 7, திவ்விய சுபாவங்கள்)
  • ஆவிக்குரிய வாழ்வை அனலாக்கும் (வரங்கள், கிருபைகள், ஜெபவாழ்வு, ஊழிய தரிசனங்கள்.
தேவையற்றவைகள் நம்முடைய வாழ்விலிருந்து சுட்டெரிக்கப்பட்டு, நாம் சுத்திகரிக்கப்பட்டவர்களாகி அவருக்குள் அனலாய் வாழ்ந்திட ஆவியானவருக்குள் நிலைத்திருப்போமாக. சபை அனலுமில்லாமல் குளிருமில்லாமல் இருப்பதை தேவன் விரும்பவில்லை.

வெளி-5: 6 அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன், அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது, அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.

3. ஏழு கண்களாகிய ஆவி:

ஆந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஆவி என்று விவரிக்கப்பட்டுள்ளதைக் கவனியுங்கள். கண்கள் என்பது பார்வையைக் குறிக்கிறது. ஏழு கண்கள் என்பது பூரணமான பார்வைக்கு அடையாளமாக இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் பூமியெங்கும் உலாவக்கூடியவராக இருக்கிறார். ஒரே நேரத்தில் பூமி முழுவதிலும் உள்ள அனைத்தையும் பார்க்கக் கூடியவராக ஆவியானவர் இ;ருக்கிறார். அவருடைய பார்வைக்கு மறைவானவைகள் எதுவுமே இல்லை. நாம் செய்வது இருளான இடத்திலும், மறைவான இடத்திலும், ஒரு மனிதருக்கும் தெரியாமல் இருந்தாலும் அவருடைய பார்வைக்கு மறைவானதாக எதுவுமே இருப்பதில்லை. நன்மையானவைகளையும். தீமையானவைகளையும் எல்லாவற்றையும் அவருடைய கண்கள் காண்கின்றன.

தேவனுடைய கண்கள் என்பது:

பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது. இயேசு தேவனுடைய சரீரமாக இருக்கிறார், ஆவியானவர் தேவனுடைய கண்களாக இருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

1ராஜா-8: 29 ஆலயத்தின்மேல் இரவும் பகலும் திறக்கப்பட்டிருக்கம் கண்கள்:
2நாள்-7: 15 ஜெபங்களுக்குத் திறக்கப்பட்டிருக்கும் கண்கள்
2நாள்-16: 9 தேவனைப்பற்றி உத்தம இருதயத்தோடிருப்பவர்களிடம் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி பூமியெங்கும் உலாவிக்கெண்டிருக்கும் கண்கள்
சங்கீதம்-34: 15 நீதமான்கள் மேல் நோக்கமாயிருக்கும் கண்கள்
நீதி-15: 3 நல்லோரையும் தீயோரையும் நோக்கிப் பார்க்கும் கண்கள்


எப்படிப்பட்ட கண்கள் இவைகள்?

யோபு-10: 4 மாம்சக் கண்கள் உமக்கு உண்டோ? மனுஷன் பார்க்கிறபிரகாரமாய்ப் பார்க்கிறீரோ?
மனிதன் பார்க்கிறபடி தேவன் பார்ப்பவரல்ல. மாம்சப் பார்வை தேவனிடம் இல்லை. மனிதன் முகத்தைப் பார்க்கிறான், தேவனோ இருதயத்தைப் பார்க்கிறார். ஆவியானவரால் தேவனுடைய பார்வை மேலானதாக, தூய்மையானதாக, நேர்மையானதாக இருக்கிறது.
யோபு-34: 21 அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது, அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.

Comments