எபே-1: 3 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம், அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். தேவன் ஆசீர்வதிப்பவர், ஆசீர்வதிக்க விரும்புகிறவர், ஆசீர்வாதங்களைக் கொடுக்கிறவர், அவரே மெய்யான ஆசீர்வாதங்களின் பிறப்பிடமாக இருக்கிறார். இந்த உலக வாழ்வில் நமக்கும் ஆசீர்வாதம் தேவையானதாக இருக்கிறது, ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு ஏராளமான வழிமுறைகள் இருக்கின்றன. சொந்த உழைப்பால், முன்னோர்கள் சேர்த்து வைத்ததால், பிறருடைய உதவியால், சாத்தானால், தேவனால் என்று பலவிதங்களில் நாம் ஆசீர்வாதங்களைப் பெற்றிட முடியும். தேவனை அறிந்த மக்களிடம் தேவன் எதிர்பார்ப்பது என்ன? ஏசா-55: 6 கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள், அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். நாம் எதற்காக சபைக்கு வருகிறோம், ஜெபிக்கிறோம், ஆராதிக்கிறோம், வேதம் வாசிக்கிறோம், உபவாசிக்கிறோம், ஊழியம்செய்கிறோம்? பிரச்சினைகள் தீர்ந்திட, வியாதி சுகமாகிட, தேவைகள் சந்திக்கப்பட போன்ற ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக நாம் இவைகளைச் செய்வோமானால், ...