புதிய ஏற்பாட்டுக்குரிய பொது முகவுரை
யூதர்களுக்கு மல்கியாவின் புத்தகமே தேவனுடைய கடைசிப் பேசுதலாக இருக்கிறது. அதிலிருந்து இப்பொழுது 2400 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் தேவனுடைய வேதவசன சத்தம் இல்லாதவர்களாக, பழையஏற்பாட்டை மாத்திரமே உடையவர்களாக இருக்கிறார்கள். காரணம் யூதர்கள் புதியஏற்பாட்டை நம்புவது கிடையாது. அதேநேரத்தில், கிறிஸ்தவர்களாகிய நமக்கு, கடைசியாக தேவனின் வேதவசன சத்தம் கேட்கப்படுதலாகிய மல்கியாவின் புத்தகத்திற்குப்பின், சுமார் 430 வருடங்களுக்குப் பிறகுதான் வந்தது. தேவன் ஆபிரகாமோடு பேசியதிலிருந்து, தேவசத்தத்தைக் கேட்டல் என்பதற்கு இவ்வளவு நீண்ட இடைவெளி என்பது இருந்தது கிடையாது (அதாவது சுமார் 2400 வருடங்களுக்கு மேலாக). ஆபிரகாமிலிருந்து யோசேப்பிற்குப் பிறகு, இவர்களுக்கும் மோசேக்கும் இடையில், தேவன் பேசியதைக்குறித்து சுமார் 400 ஆண்டுகால இடைவெளியில் பார்க்கிறோம். அதன்பிறகு மோசே, யோசுவா, நியாயாதிபதிகள், சாமுவேல், தாவீது, சாலொமோன் போன்றவர்களோடு நேரடியாகவும், ராஜாக்களோடு தீர்க்கதரிசிகள் மூலமாகவும் தேவன் அடிக்கடி பேசினார். ஆனால் மல்கியாவின் புத்தகத்திற்கும், மத்தேயு சுவிசேஷத்திற்கும் இடையில் 400 ஆண்டுகளுக்குமேல் தேவனுடைய சப்தம் கேட்கப்படுதல் என்பது இல்லாமற்போயிருந்தது. மீண்டும் முதல்முறையாக, ஆசாரியனாகிய சகரியாவுக்கு தேவனுடைய வார்த்தை வெளிப்பட்டதைக்குறித்து லூக்கா சுவிசேஷத்தில் வாசிக்கிறோம்.
லூக்-1: 5, 8, 11, 13 யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகாயா என்னும் பேர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து. 8. அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய வகுப்பின் முறைப்படி தேவசந்நிதியிலே ஆசாரியஊழியம் செய்துவருகிற காலத்தில், 11. அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான். 13. அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.
பழைய ஏற்பாட்டுப் பிரமாணமும் (சட்டம்), புதிய ஏற்பாட்டுக் கிருபையும்:
பாவத்தைக்குறித்த விழிப்புணர்வை மக்களுக்குக் காட்டுதல் பழையஏற்பாட்டின் நோக்கமாக இருக்கிறது என்று பவுல் சொல்கிறார்.
ரோமர்-7: 7 ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை, இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.
மனுக்குலம் இன்னும் அதிகமான துன்மார்க்கத்திற்குள் செல்வதிலிருந்து அவர்களைத் தடுத்து, நமக்கு ஒரு இரட்சகர; தேவை என்பதை நியாயப்பிரமாணம் அறியவைத்தது. நியாயப்பிரமாணம் நம்மை நீதிமானாக்குவதில்லை. ஆனால் நீதிமானாக்கப் படுதலுக்குரிய விசுவாசத்திற்கு நம்மை வழிநடத்துகிறது. நீதிக்குரிய வழியைக்குறித்து அது நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
கலா-3: 19, 22-24 அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப் பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களின் நிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது. 22. அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசம் உள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது. 23. ஆதலால் விசுவாசம் வருகிறதற்கு முன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப் பிரமாணத்தின் கீழ் காவல் பண்ணப் பட்டிருந்தோம். 24. இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப் படுவதற்கு, நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.
கலா-3: 11 நியாயப் பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லை என்பது வெளியரங்கமாய் இருக்கிறது. ஏனெனில், விசவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.
இயேசுகிறிஸ்து வந்தபிறகு எல்லாமே மாறிவிட்டது! நாம் இப்பொழுது கிறிஸ்துவுக்குள் பிழைத்திருக்கிறபடியால், நியாயப்பிரமாணத்தால் காக்கப்படவேண்டி அவசியமில்லை. பழையஏற்பாட்டு மாம்ச சட்டங்களிலிருந்து, புதிய ஏற்பாட்டின் ஆவிக்குரிய சத்தியங்களுக்கு இயேசு மாற்றுகிறார். சரீரப்பிரகாரமாகச் செய்ய வேண்டியவைகளைத்தான் பழையஏற்பாட்டுப் பிரமாணம் உடையதாக இருந்தது. ஆனால் ஆவிக்குரிய மறுபடி பிறத்தலே இரட்சிப்பிற்கான தேவை என்று இயேசு சொன்னார்.
யோவா-3: 3-5 இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 4. அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இராண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக் கூடுமோ என்றான். 5. இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
நீதியான வாழ்வைக்குறித்த துல்லியமான விபரங்களை பழையஏற்பாட்டுப் பிரமாணம் கொடுத்தது. ஆனால், ஒருவராலும் அவைகளை முழுமையாகக் கைக்கொள்ள முடியவில்லை, இதற்காகவே பாவிகளை இரட்சித்திட இயேசு பூமிக்கு வந்தார். பூரணமான மனிதனாக வந்த தெய்வம் இயேசு வந்து நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டு, நமக்காகப் பாவமாகி, தன்னுடைய மரணத்தினால், நம்முடைய பாவங்களுக்கான நிவர்த்தியை அவர் ஏற்படுத்திக் கொடுத்தார்.
2கொரி-5: 21 நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினர்.
எனவே இரட்சிக்கப்படுவதற்கு நாம் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. இயேசுவை விசுவாசித்தாலே போதும்! பழையஏற்பாட்டின் பிரமாணம் அனைத்தையும் இயேசு கிறிஸ்து நிறைவேற்றியிருக்கிறார். அவரை விசுவாசிக்கும்போது நாம் அவருக்குள் வந்து இரட்சிக்கப்பட்ட, நீதிமான்களாகிறோம். இயேசு சரீரப்பிரகாரமாக நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார், அவர்மீது வைக்கும் விசுவாசத்தால், அது நிழலாகக் காண்பித்த ஆவிக்குரிய ஜீவனுக்குள் நாம் பிரவேசிக்கிறோம்.
மத்-5: 17 நியாயப் பிரமாணத்தையானாலும் தீர்க்க தரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள், அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.
2கொரி-5: 17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான், பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
கொலோ-2: 15-17 துரைத்7தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார். 16. ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வு நாட்களையுங் குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப் படுத்தாதிருப்பானாக. 17. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது, அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.
நியாப்பிரமாணம் தேவையா, தேவையில்லையா?
மாமரத்தின் விதைக்கும், மாமரத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதைப்போலவே விதை என்பது நியாயப் பிரமாணத்திற்கும், மரம் என்பது ஆவிக்குரிய ஜீவனுக்கும் ஒத்ததாக உள்ளது. விதை மரமல்ல, ஆனால் விதையிலிருந்துதான் மரம் வருகிறது. நாம் இயேசுவைப் பார்க்கும்போது, பழையஏற்பாட்டுக்குப் பின்னாலிருக்கும் ஆவிக்குரிய உண்மைகளை அவர் நமக்கு வெளிப்படுத்துகிறார். இரட்சிக்கப்பட்ட பிறகு, நீதியுள்ள வாழ்க்கை வாழ்வதற்கு பழைய ஏற்பாடு நமக்கு உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.
†மிருகங்களைப் பலியிடுதல் பழைய ஏற்பாட்டுப் பிரமாணமாக இருந்தது. இயேசு தம்மையே பலியாகக் கொடுத்து இரத்தம் சிந்துதல் மூலம் நமக்காக அதை நிறைவேற்றி முட
†பழைய ஏற்பாட்டுப் பிரமாணத்தின்படி தேவனுடைய சபையில் இஸ்ரவேலர் மாத்திரமே அங்கத்தினர்களாக இருக்க முடிந்தது. இயேசு தடையாக இருந்த சுவரைத் தகர்த்து யாவரையும் அவருடைய சபைக்குள் உட்படுத்தி இருக்கிறார் (எபே-2: 14 எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, 15. சட்டதிட்டங்களாகிய நியாயப் பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, 16. பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார்).
†இஸ்ரவேலர்கள் சரீரத்தின்படியான சத்துருக்களை அழிக்கும்படி கட்டளைபெற்றார்கள். சரீரப்பிரகாரமான சத்துருக்களுக்காக ஜெபிக்குமாறு, அவர்களை நேசிக்குமாறு கட்டளையிடப் படுகிறோம். நமக்கு மனிதர்கள் சத்துருக்கள் கிடையாது, மாறாக சாத்தானுடைய ஆவிகள்தான். அவைகளோடுதான் நாம் யுத்தம் செய்யவேண்டும்.
†இஸ்ரவேலர்கள் வாரத்தின் 7ஆவது நாளைப் பரிசுத்தமான இளைப்பாறுதலின் ஓய்வுநாளாக ஆசரிக்கவேண்டும். நமக்கோ இயேசு கிறிஸ்துவே இளைப்பாறுதலின் ஓய்வுநாளாக இருக்கிறார். ஓய்வுநாள் என்பது கிழமையில் அல்ல, மாறாக தேவனுடைய மன்னிப்பில் ஒவ்வொரு நாளும் இளைப்பாறுவதாகும்
†அசுத்தமான உணவை உண்ணக்சுடாது என்று இஸ்ரவேலருக்கு தடைவிதிக்கப்பட்டது (லேவி-11: 1-17). வாயின் வழியாக உள்ளே செல்வதல்ல, வாயிலிருந்து வெளியே வருவதுதான் ஒரு நபரைத் தீட்டுப்படுத்துகிறது என்று இயேசு சொல்கிறார் (மாற்-7: 15 மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப் படுத்தமாட்டாது, அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்).
இதுபோன்ற எத்தனையோ உதாரணங்களை நாம் பார்க்கலாம். பழையஏற்பாட்டை நாம் வாசிக்கும்போது, அதிலே நம்முடைய வாழ்விற்குரிய ஆவிக்குரிய நடைமுறைப்படுத்தலைப் புரிந்துகொள்வதற்கு நாம் இயேசுவைப் பார்க்கவேண்டும்.
புதிய ஏற்பாட்டின் தொகுப்பு
புதியஏற்பாட்டில் மொத்தம் 27 புத்தகங்கள் உள்ளன (4 சுவிசேஷங்கள், 1 சபை வரைபடம், 21 நிரூபங்கள், 1 கடைசிக்கால தீர்க்கதரினம்). இதை மொத்தம் 8+1 ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள்.
•மத்தேயு-1
•மாற்கு-1
•லூக்கா-2
•யோவா-5
•பவுல்-13
•யாக்கோபு-1
•பேதுரு-2
•யூதா-1
•பெயர் தெரியவில்லை-1 (எபிரேயருக்கு எழுதப்பட்டது). மொத்தம் 27 புத்தகங்கள்.
Comments
Post a Comment